ஆன் லைன் ரயில் கட்டண உயர்வு எவ்வளவு? முழு விவரம் இங்கே

Indian Railways: எனினும் UPI அல்லது BHIM செயலிகள் மூலமாக டிக்கெட் புக் செய்கிறவர்களிடம் குறைவான சேவைக் கட்டணமே வசூல் செய்யப்படும்.

Indian Railways Ticket Booking Online
Indian Railways Ticket Booking Online

Indian Railways Ticket Booking Online: இந்திய ரயில்வே டிக்கெட் ஆன் லைன் புக்கிங் கட்டணத்திற்கு சேவைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு, அமல் ஆகியிருக்கிறது. ஏசி அல்லாத பயண டிக்கெட்டுகளுக்கு தனி கட்டணம், ஏசி பயண டிக்கெட்டுகளுக்கு தனி கட்டணம் என அமல் ஆகியிருக்கிறது. கட்டண விவரங்களை இங்கு காணலாம்.

இந்திய ரயில்வே, நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் மாபெரும் சேவை அமைப்பு. இன்றும் மக்களின் வசதியான பயணத்திற்கு பெரிதும் உதவி வருகிறது ரயில்வே. இதன் வர்த்தக பிரிவு, ஐ.ஆர்.சி.டி.சி என அழைக்கப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம். இதன் மூலமாகவே ஆன்லைன் டிக்கெட் விற்பனை நடக்கிறது.

Indian Railways Ticket Booking Online Service Charges: ஆன் லைன் டிக்கெட் சேவைக் கட்டணம்

ஆன் லைன் டிக்கெட் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஆர்.சி.டி.சி நீக்கியது. ஆன் லைன் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதன் காரணமாக கடந்த நிதி ஆண்டில் மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி.க்கு 26 சதவிகிதம் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் சேவைக் கட்டணம் வசூலிக்க ஐ.ஆர்.சி.டி.சி முடிவு செய்தது. இதற்கு ரயில்வே வாரியம் கடந்த மாதம் ஒப்புதல் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 1-ம் தேதி (நேற்று) முதல் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு சேவைக் கட்டணத்தை அறிமுகம் செய்தது ஐ.ஆர்.சி.டி.சி. இதன்படி ஏசி அல்லாத டிக்கெட்டுகளுக்கு சேவைக் கட்டணமாக டிக்கெட் ஒன்றுக்கு 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. பயணச் சீட்டு ஒன்றுக்கு வசதிக் கட்டணமாக ரூ 30 வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் இணைத்துக் கொள்ளப்படும்.

எனினும் UPI அல்லது BHIM செயலிகள் மூலமாக டிக்கெட் புக் செய்கிறவர்களிடம் குறைவான சேவைக் கட்டணமே வசூல் செய்யப்படும். அதாவது இந்த செயலிகள் மூலமாக புக் செய்யும் ஏசி அல்லாத டிக்கெட்டுகளுக்கு 10 ரூபாயும், ஏசி பயண டிக்கெட்டுகளுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

அமலுக்கு வந்தது புதிய ரயில் கட்டணம்… சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும்…

3 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்பவர்களிடம் ஏசி அல்லாத டிக்கெட்டுக்கு தலா 20 ரூபாயும், ஏசி பயண டிக்கெட்டுக்கு தலா ரூ 40-ம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irctc online irctc convenience fee irctc login id irctc app indian railway

Next Story
இந்தியா முழுவதும் களைகட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்… சிறப்பு போட்டோ கேலரிVinayagar Chathurthi 2019 Celebrations across India photo gallery
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com