scorecardresearch

ஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி!

ஆசியாவிலேயே விலையுயர்ந்த திருமணம் எனப் பெயர் பெற்றுள்ளது இஷா அம்பானியின் திருமணம்.

அம்பானி மகள் திருமணம்
அம்பானி மகள் திருமணம்

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலின் திருமண நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல வைர உற்பத்தி தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் நேற்று நடைபெற்றது.

அம்பானி மகள் திருமணம் ஹைலைட்ஸ்:

இதையொட்டி அம்பானியின் ஆண்டில்லா பங்களா வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முன்பு நடந்த மகா ஆரத்தியில் நீதா அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.பாராத் நிகழ்ச்சியில் உறவினர்கள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர்களான அனில் அம்பானியும் முகேஷ் அம்பானியும் உறவினர்களை வரவேற்றனர். நடனங்கள், இசைநிகழ்ச்சிகள் என திருமண ஊர்வலம் களைகட்டியது.

அதன்பின்னர் ஆண்டில்லா பங்களாவில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், முதலமைச்சர்களான சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷில்பா ஷெட்டி, அலியா பட் உள்ளிட்ட பலரும் அங்கு திரண்டிருந்தனர். திமுக தலைவர் முக ஸ்டாலினும் திருமணத்தில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்

இதே போல நடிகை ஐஸ்வர்யா ராய், கணவர் அபிசேக் பச்சன் , மற்றும் மகள் ஆராதயாவுடன் வந்தனர். புதுமணத் தம்பதியரான பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்-அஞ்சலி உள்பட ஏராளமான பிரமுகர்கள் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

இதில் ஹைலைட்டாக நடந்த மற்றொரு நிகழ்வு என்னவென்றால் திமுக தலைவர் ஸ்டாலினும் நிகழ்ச்சீல் கலந்துக் கொண்டுள்ளார். தென்னிந்தியாவில் இருந்து அம்பானி மகள் திருமணத்தில் கலந்துக் கொண்ட 2 பிரபலங்கள் ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் மற்றுமே.

பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாய் நடந்த இந்த திருமணம் ஆசியாவிலேயே விலையுர்ந்த திருமணம் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. இஷா அம்பானியின் திருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

37 வருடங்களுக்கு முன்னர் நடந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணத்துக்கு 110 மில்லியன் டாலர் (தற்போதைய மதிப்பு) செலவிடப்பட்டுள்ளது. தற்போது, அந்த மதிப்பை இஷா அம்பானி திருமணம் நெருங்கியுள்ளது. இதனால், ஆசியாவிலேயே விலையுயர்ந்த திருமணம் எனப் பெயர் பெற்றுள்ளது இஷா அம்பானியின் திருமணம்.

இதோடு அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டம் முடிவடைந்திடவில்லை. அம்பானியின் அடுத்த மகன் அனந்த் அம்பானியின் திருமணம் கொண்டாட்டம் அடுத்த சில மாதங்களிலே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Isha ambani wedding heres everything that happened at antilia

Best of Express