scorecardresearch

மலை நாட்டு மக்கள் விரும்பும் பலாப்பழ பாயாசம்; ஈஸியாக செய்வது எப்படி?

jackfruit payasam in tamil: மூளை மற்றும் உடலுக்கும் அதிக பலத்தைத் தரும் இந்த சுவைமிகுந்த பலாப்பழம் நரம்புகளை உறுதியாக்கி ரத்தத்தை விருத்தி அடைய செய்கின்றது.

jackfruit recipes in tamil: simple steps to make jackfruit kheer in tamil

palapazham payasam in tamil: முக்கனிகளுள் ஒன்று பலா என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்றுதான். இந்த பலா பழத்தின் சுவையை வார்த்தைகள் சேர்த்து வரிகள் கோர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த தித்திப்பான பழத்தில் பல ஊட்டச்சத்துக்களும் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகளும் உள்ளன.

மூளை மற்றும் உடலுக்கும் அதிக பலத்தைத் தரும் இந்த சுவைமிகுந்த பழம் நரம்புகளை உறுதியாக்கி ரத்தத்தை விருத்தி அடைய செய்கின்றது. இவற்றில் ‘விட்டமின் ஏ’ அதிகம் காணப்படுவதால் அவை நமது கண் பார்வைக்கு உதவுகின்றன. மேலும் அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறுவார்கள்.

இவ்வளவு நற்பண்புகளையும், மருத்துவ பயன்களையும் உள்ளடக்கியுள்ள பலாப்பழத்தில் எளிய முறையில் எப்படி பாயாசம் தயார் செய்யலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-

பலாப்பழம் – 500 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் நன்கு அரைத்தது)
வெல்லம் – 250 கிராம் (தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சி வைத்துக்கொள்ளவும்)
தேங்காய் பால் – 1 கப்
நெய் – 4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு
உலர் திராட்சை
ஏலக்காய் – 1/4 டீ ஸ்பூன் (அரைத்தது)
தண்ணீர்

பலாப்பழ பாயாசம் செய்முறை

முதலில் ஒரு சிறிய பேன் அல்லது பாத்திரம் எடுத்து அதில் 3 டீஸ்பூன் நெய் விட்டு முன்பு நன்கு அரைத்து வைத்துள்ள பலாப்பழத்தை சேர்க்கவும். மிதமான சூட்டியில் நெய் அரைத்த பலாப்பழத்தோடு சேரும் வரை கிளறி விடவும். தொடர்ந்து முன்னர் காய்ச்சி வைத்துள்ள வெல்ல பாகை சேர்த்து மிக்ஸ் செய்யவும். பிறகு தேங்காய் பால் சேர்த்தும் மிக்ஸ் செய்யவும். அதன் பின்னர் அரைத்த ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இப்போது தனியாக ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

இவற்றை நாம் தயார் செய்து வரும் பலாப்பழ பாயாசத்தில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அரைத்த பலாப்பழம் பாத்திரத்தில் சேர்ப்பது முதல் மிதமான சூட்டை பின் தொடரவும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Jackfruit recipes in tamil simple steps to make jackfruit kheer in tamil