வெல்லத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ்… இதில் இவ்ளோ நன்மை இருக்கு!
பலரும் தங்கள் உடல் எடையை குறைப்பது பற்றி பேசுகிறார்கள். வெல்லத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து குடியுங்கள் எவ்வளவு நன்மை இருக்கு பாருங்கள்.
பலரும் தங்கள் உடல் எடையை குறைப்பது பற்றி பேசுகிறார்கள். வெல்லத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து குடியுங்கள் எவ்வளவு நன்மை இருக்கு பாருங்கள்.
இப்போதெல்லாம் பலரும் தங்கள் உடல் எடையைக் குறைப்பது பற்றி பேசுகிறார்கள். உடல் எடையைக் குறைப்பது என்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் இப்போது தங்கள் ஆரோக்கியமான நல்வாழ்வைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆரோக்கியமான, சத்தான உணவை உட்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
Advertisment
ஆனாலும், ஆரோக்கியமான உணவுடன், உடற்பயிற்சியும் முக்கியம். உடல் எடையைக் குறைப்பதற்கு இங்கே சில குறிப்புகளைத் தருகிறோம். உடல் எடையைக் குறைக்க ஆரோக்கிய பாணங்கள் உதவியாக இருக்கும். இது நச்சுகளை அகற்றி உடலை சுத்தப்படுத்தவும், எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஆரோக்கிய பானங்களை சமையலறை பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.
வெல்லம் மற்றும் எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள்:
Advertisment
Advertisements
எலுமிச்சை சாறு அதன் எடையைக் குறைப்பதற்காக அறியப்படுகிறது. அதில் வெல்லம் சேர்ப்பதன் மூலம், இரண்டு பொருட்களின் நன்மைகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.
எலுமிச்சை வைட்டமின் சி உட்கொள்வதற்கான ஒரு வளமான ஆதாரமாகும். இது நீரேற்றம், சருமத்தின் தரம், செரிமானம், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது. இவை அனைத்தும் உடல் எடை குறைப்பு மற்றும் உடல் எடை பராமரிப்பு ஆகியவற்றை செய்கிறது.
மறுபுறம், வெல்லம், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது, உடலை சுத்தப்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனுடன், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே, வெல்லம் மற்றும் எலுமிச்சை நீரின் கலவையானது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.
வெல்லம் மற்றும் எலுமிச்சை தண்ணீர் செய்வது எப்படி?
வெல்லத்தை சிறிதளவு எடுத்து கொதிக்க வைக்கவும். தண்ணீரை வடிகட்டி சாதாரண வெப்பநிலை வரை ஆறவிடவும். எலுமிச்சை தண்ணீர் 1 தேக்கரண்டி சேர்க்கவும். அதை கலந்து குடிக்கவும். அவ்வளவுதான். எவ்வளவு நன்மை இருக்கு பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"