jalebi in idli batter tamil: தமிழ் உணவு கலாச்சாரத்தில் இனிப்பு வகைகளுக்கு என தனி இடம் உண்டு. பொதுவாக விருந்தினர்களின் வீடுகளுக்கு செல்லும் போது இனிப்பு காரம் நிச்சயம் இடம் பிடிக்கும். இந்த விருந்தோம்பல் கலாச்சரத்தை நாம் தொன்றுதொட்டு பின்பற்றி வருகிறோம்.
விழா காலங்களிலும், சுப நிகழ்ச்சிகளிலும் இடம் பிடிக்கும் இந்த இனிப்பு வகைகளை முன்னப்பெல்லாம் வீட்டிலேயே தயார் செய்வார்கள். ஆனால், தற்போது கடைகளை நோக்கியே நாம் நகர்ந்து வருகிறோம். இதற்கு காரணம் என்ன என்று நாம் கேட்கையில் சிலர் நேரமின்மையை குறிப்பிடுகிறார்கள். ஒரு சிலரோ செய்முறை மறந்து விட்டது, தெரியாது என்கிறார்கள். இவர்களுக்காகவே நமது இணைய பக்கத்தில் அன்றாட செய்முறை குறிப்புகளை வழங்கி வருகிறோம்.
அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஜிலேபியை இட்லி மாவில் எப்படி தயார் செய்யலாம் என்பதற்கான எளிமையான குறிப்பை இங்கு வழங்கியுள்ளோம்.
இட்லி மாவில் ஜிலேபி - தேவையான பொருட்கள்:-
இட்லி மாவு – ஒரு கப்
ஃபுட் கலர் – அரை ஸ்பூன்
உப்பு கால் – ஸ்பூன்
சர்க்கரை – அரை கப்.
ஜிலேபிக்கான செய்முறை:-
சுவையான ஜிலேபி தயார் செய்ய நாம் முதலில் செய்ய வேண்டியது சர்க்கரை பாகு. அவற்றுக்கு ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பின் மீது வைத்து சூடேற்றவும்.
பாத்திரம் சூடானதும் அதில் அரை கப் சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இவற்றை கைபடாமல் சிறிது நேரம் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். சர்க்கரை கெட்டியாகி பாகு வடிவத்திற்கு வரும்போது அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஆற விடவும்.
ஓரளவு சர்க்கரைப் பாகு ஆறும் போது ஒரு சிட்டிகை ஃபுட் கலர் சேர்த்து கலந்து விடவும். தொடர்ந்து கெட்டியான இட்லி மாவுடன் கால் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இப்போது, நாம் தயார் செய்து வைத்துள்ள அந்த மாவை ஒரு மருதாணி கோன் வடிவில் உள்ளது பேப்பரில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
அதன் பிறகு, எண்ணெயை சூடேற்றி மாவை ஜிலேபி வடிவில் எண்ணெயின் மீது பிழிந்து விடவும்.
ஒரு வேளை இட்லி மாவு திரிந்தால் அவற்றுடன் சிறிதளவு மைதா மாவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்படி நாம் சேர்த்து வைத்துள்ள மாவில் ஜிலேபிகளை தயார் செய்து கொள்ளவும். ஜிலேபி தயார் ஆனதும், அவற்றை முன்பு தயார் செய்துள்ள சர்க்கரைப் பாகில் சேர்த்து நன்கு ஊற விடவும். அவை ஊறியதும் தட்டில் வைத்து பரிமாறி ருசிக்கவும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.