Tamil Serial News: குணச்சித்திர நடிகராகவும், ஹீரோவாகவும் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். தற்போது இவரது மூத்த மகள் ஜோவிதாவும் நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரை நினைவுக்கு எட்டவில்லையா? சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியலில் மற்றொரு கதாநாயகி கீர்த்தியாக நடித்து வரும் கீர்த்தி தான் அவர்.
ரேகா எவிக்ட், கோபப்பட்டாலும் மாஸ்க், சிரிச்சாலும் மாஸ்க்கா? – பிக் பாஸ் விமர்சனம்
அவர் ஏற்கனவே சினிமாவிலும் நடித்துள்ளார். நடிகை அம்பிகாவின் மகன் வலம் கேசவ் அதில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்தப் படத்தின் பெயர் கலாசல். இந்த படத்தினை கலைத்தாய் பிலிம்ஸ் சார்பில் பி.சி பாலு தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி அஸ்வின் மாதவன் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோர் இடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். மேலும், இந்த படத்தில் ராதாரவி, அம்பிகா, மதன் பாப், பானுசந்தர் என பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் வேலைகள் முடிந்தாலும், இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. அதனால் நேரத்தை வீணடிக்காமல் சீரியலுக்குள் நுழைந்து விட்டார்.
குடும்பத்துடன் ஜோவிதா...
தனது திரை அறிமுகம் குறித்து ஒரு நேர்க்காணலில் பகிர்ந்துக் கொண்ட ஜோவிதா, “ப்ளஸ் டூ முடிச்சிருந்த நேரம். ஒருமுறை என்னை எதேச்சையா பாரதிராஜா சார் பார்த்திருக்கார். அவரோட இயக்கத்தில் புதுப்படத்துல என்னை நடிக்க வெக்க அப்பாகிட்ட கேட்டார். அவர் சம்மதிக்கவேயில்லை. ஒருவழியா அப்பாவின் சம்மதம் வாங்கிய பாரதிராஜா சார், என்னை நாயகியா செலக்ட் பண்ணினார். போட்டோஷூட் முடிச்சுட்டு, ரிகர்சல்கூட நடத்தினார்.
அந்நேரம், பி.சி.ஶ்ரீராம் சார்கிட்ட அப்பா என்னைக் கூட்டிட்டுப்போனார். `நடிக்க ஆசைப்படுறா. சரிவருமா?'ன்னு ஶ்ரீராம் சார்கிட்ட அப்பா கேட்டார். அவர் என்னை போட்டோ எடுத்து முடிச்சதும், ``குடும்பப் பாங்கான முகம். நடிகையா வர்றதுக்கு எல்லா அம்சமும் இருக்கு"ன்னு வாழ்த்தினார். இந்நிலையில, சில காரணங்களால் பாரதிராஜா சாரின் புதுப்பட ஷூட்டிங் தள்ளிப்போயிடுச்சு. அதனால வருத்தப்பட்டேன்.
ஜோவிதாவின் அழகிய குடும்பம்
”சினிமாவில் நடிக்க நேரம் கூடிவரணும். இப்போதைக்கு ஆசையை வளர்த்துக்காத. படிச்சு முடி. நல்ல வாய்ப்பு ஏதாச்சும் வந்தா அப்புறம் நடிக்கிறதைப் பத்தி முடிவெடுப்போம்" என அப்பா சொன்னாரு. அதனால படிப்புல கவனம் செலுத்துனேன்” என்ற ஜோவிதா சமீபத்தில் பி.ஏ. ட்ராவல் அண்ட் டூரிஸம் படிப்பை முடித்திருக்கிறார்.
Tamil News Today Live: முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்!
”லாக்டெளனால் வீட்டுக்குள்ளயே முடங்கியிருக்க முடியாம, ஏதாச்சும் உருப்படியா ஒரு வேலை செய்யலாம்னு நினைச்சுட்டிருந்தேன். ஒருநாள் திடீர்னு `பூவே உனக்காக' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. என்னோட ரோல் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஆடிஷன் முடிச்ச சில மணிநேரத்தில் என்னை நடிக்க வரச்சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட கேட்டேன். ``சின்னத்திரையில் புகழ்பெற்ற பிறகும்கூட வெள்ளித்திரைக்குப் போகலாம். படிப்படியா முன்னேறினால்தான் அந்த வெற்றி நிலைக்கும். விருப்பம் இருந்தா இந்த சீரியல்ல நடி"ன்னு சொன்னாரு. அதனால சினிமாவுக்கு சின்ன பிரேக் கொடுத்துட்டு சீரியலுக்கு வந்துட்டேன்” எனும் ஜோவிதாவுக்கு ரஜினிக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் நடிக்க ஆசையாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”