நுரையீரலை பாதுகாக்கும்; சுவாசிப்பதை அதிகப்படுத்தும்... அரைத்த மஞ்சள், இஞ்சி சேர்த்த இந்த ஜூஸ்: டாக்டர் ராஜலட்சுமி டிப்ஸ்
மனித உடலின் ராஜ உறுப்புகள் என்று அழைக்கப்படுபவை, இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகும். ராஜ உறுப்புகள் சீராக இயங்க எந்த மாதிரியான ஜூஸ் குடிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் ராஜலட்சுமி.
மனித உடலின் ராஜ உறுப்புகள் என்று அழைக்கப்படுபவை, இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகும். ராஜ உறுப்புகள் சீராக இயங்க எந்த மாதிரியான ஜூஸ் குடிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் ராஜலட்சுமி.
நுரையீரலை பாதுகாக்கும்; சுவாசிப்பதை அதிகப்படுத்தும்... இந்த ஜூஸ்: டாக்டர் ராஜலட்சுமி
மனித உடலின் ராஜ உறுப்புகள் என்று அழைக்கப்படுபவை, இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகும். இந்த உறுப்புகளால் உடலின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை உற்பத்தி செய்யவும், கட்டுப்படுத்தவும் முடியும். இந்த ராஜ உறுப்புகள் சீராக இயங்க எந்த மாதிரியான ஜூஸ் குடிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் ராஜலட்சுமி.
Advertisment
1. இதயம் - பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் காணப்படும் பொட்டாசியம், மெக்னீசிய சத்துகள், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். அது மட்டுமன்றி, இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் (Oxidative Stress) உடலில் ஏற்படும் அழற்சியை நீக்க உதவும். இதய நோய் என்பது பெண்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. பீட்ருட் சாரில் இருக்கும் நைட்ரேட்டுகள், ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இருதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு LDL Cholesterol எனும் கெட்ட கொழுப்பு காரணமாக இருக்கிறது. இதை குறைக்க, பீட்ரூட் சாறு உதவுகிறது.
2. நுரையீரல் - மிக்ஸிடு ஜூஸ்
Advertisment
Advertisements
அரைத்த மஞ்சள் பேஸ்ட் 2 டேபிள்ஸ்பூன், தோல் சீவிய இஞ்சி பேஸ்ட் 4 டேபிள்ஸ்பூன், ஒரு சிட்டிகை மிளகு தூள், ஒரு எலுமிச்சை பழம் (4 நறுக்கிய பீஸ்) ஆகியவற்றை போட்டு 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, ஒரு டம்ளர் வரை சுண்ட காய்ச்ச வேண்டும்.அதனை வடிகட்டி தேவையான அளவு தேன் கலந்து காலை, மாலை என இரு வேளைகளில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் ராஜலெட்சுமி. மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பாரம்பரிய மருத்துவத்தில் சுவாச நன்மைகளுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகின்றன. மிளகு சேர்ப்பது குர்குமின் உறிஞ்சுதலை மேம்படுத்த, அதே நேரத்தில் எலுமிச்சை வைட்டமின் சி மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவையை வழங்குகிறது.
3. கல்லீரல் - ஒரு கைப்பிடி கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றால் செய்யப்பட்ட சாறு