காரக்குழம்பு வகையில் கொஞ்சம் வித்தியாசமானது; மணத்தக்காளி குழம்பு செய்வது எப்படி?
Manathakkali Kai Kuzhambu Homemade Recipe tamil: கல்லீரல் பிரச்சனைகள், சரும அலர்ஜி, வெயில் கட்டி, கை கால் வலி, காய்ச்சல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் மணத்தக்காளியின் காயில் எப்படி சுவையான காரா குழம்பு செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
Manathakkali Kai Kuzhambu Homemade Recipe tamil: கல்லீரல் பிரச்சனைகள், சரும அலர்ஜி, வெயில் கட்டி, கை கால் வலி, காய்ச்சல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் மணத்தக்காளியின் காயில் எப்படி சுவையான காரா குழம்பு செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
kaara kuzhambu recipe in tamil: மணத்தக்காளி என்றாலே மருத்துவ பயன்களுக்கு பஞ்சாமிருகாது. இதன் இலைகள் வாய்ப்புண் மட்டுமின்றி வயிற்றுப்புண்ணையும் குணமாக்கும் வல்லமை படைத்ததாக உள்ளது. மலச்சிக்கல், கல்லீரல் பிரச்சனைகள், சரும அலர்ஜி, வெயில் கட்டி, கை கால் வலி, காய்ச்சல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகின்றன.
Advertisment
இப்படிப்பட்ட மணத்தக்காளியின் காயில் எப்படி குழம்பு செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மணத்தக்காளி காய் - 100 கிராம் எண்ணெய் - 3 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 (நடுவில் கீறியது) கருவேப்பிலை - தேவையான அளவு பூண்டு - 10 தக்காளி - 1 பெரிய அளவு மிளகாய் தூள் - 4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் புளி - சிறிய எலுமிச்சை அளவு காய்ந்த வெந்தய இலைகள் அல்லது கஸ்த்தூரி மெந்தி இலைகள் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - தேவையான அளவு
Advertisment
Advertisements
செய்முறை
முதலில் ஒரு குழம்பு வைக்கும் பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அவற்றோடு கடுகு, வெந்தயம் இடவும். அவை பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பூண்டு தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.
இபோது சுத்தமான நீரில் அலசி வைத்துள்ள மணத்தக்காளி காயை எடுத்து அவற்றோடு சேர்க்கவும். தொடர்ந்து வதக்கிய பிறகு அவற்றோடு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
அதன் பின்னர், புளி கரைசலை சேர்த்து அதன் மீது காய்ந்த வெந்தய இலைகளை தூவி விடவும். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி 5 நிமிடங்களுக்கு குழம்பை கொதிக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தல் மணத்தக்காளி காய் காரா குழம்பு தயராக இருக்கும்.
இப்போது அவற்றை உங்கள் உணவோடு சேர்த்து பரிமாறி ருசிக்கவும். இவற்றுக்கு தேங்காய் சேர்க்க தேவையில்லை. அவை சேர்க்காமலே ருசியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“