Tamil Serial News: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் சினிமா டைட்டிலைக் கொண்டவை. ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, மௌன ராகம் என்று அதன் பட்டியல் நீளும். இதில் ’காற்றின் மொழி’ சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் ஹீரோவாக நடிக்கிறார்.
சிவப்பு சேலையில்...
தடையற்ற தமிழ்ச் சக்கரம் க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு… எழுத்தாளர்கள் கண்ணீர் அஞ்சலி!
இதில் சஞ்சீவுக்கு ஜோடியாக, வாய் பேசாத கண்மணியாக நடித்து வருகிறார் பிரியங்கா ஜெயின். அமெரிக்க ரிட்டர்னான சஞ்சீவ், கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகி பிரியங்கா இருவருக்கும் ஏற்படும் காதலை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா. எதிலும் ராசி இல்லாதவள் என அப்பா, தம்பி, பாட்டி என யாருக்கும் இவரைப் பிடிக்காது. அம்மாவின் ஆதரவோடு பிரச்னைகளை எதிர்க்கொண்டு கண்மணி மீது சஞ்சீவுக்கு காதல். அது எப்படி நிறைவேறும் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி வருகிறார்கள் காற்றின் மொழி குழுவினர்.
க்ளாம் டால் லுக்
பிரியங்கா ஏற்கனவே ஒரு சில கன்னட படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு காற்றின் மொழி தொடர் மூலம் தான் அறிமுகம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா, வளர்ந்தது, படித்தது எல்லாமே பெங்களூரில். ஸ்ரீ என்.கே.எஸ் ஆங்கில பள்ளியில் பள்ளி படிப்பையும், ஜெயின் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார்.
ப்ளூ பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டோ...
அழகான, திறமையான, பிரியங்கா எம் ஜெயின் தனது 16 வயதில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா, ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றுள்ளார். பல இசை ஆல்பங்கள் மற்றும் டி.வி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதற்கடுத்து 2015 ஆம் ஆண்டில், நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட த்ரில்லர் திரைப்படமான ’ரங்கிதரங்காவில்’ நடித்தார். இதனை அனுப் பண்டாரி இயக்கியிருந்தார்.
க்யூட் ஸ்மைலுடன் பிரியங்கா
45 மணி நேர டாஸ்க்: கடினமான தருணத்தை எதிர்க்கொள்ளும் போட்டியாளர்கள்!
கிராமத்து தோற்றத்தில் இருக்கும் பிரியங்கா, நிஜத்தில் படு மாடர்ன். இவரது சமூக வலைதள பக்கத்தில் இதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஊர் சுற்றுவதும், மராத்திய உணவுகளை உண்பதும், பிரியங்காவுக்குப் பிடித்த விஷயங்களாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”