பெற்றோரின் பயங்கர எதிர்ப்பை சமாளித்து காதலை வென்ற காமெடி ஜோடி!

அந்த சீரியல்ல இப்ப என் கதாபாத்திரம் லவ் டிராக்ல போயிட்டு இருக்கு. அதற்கு என் முகம் மெச்சூரிட்டியாக இல்லை என்றார்கள்.

Kalakka povathu yaaru Anjali Prabhakaran
Anjali Prabhakaran

Kalakka Povathu Yaaru Anjali : விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஞ்சலி. இவர் ’தேன்மொழி’ என்ற சீரியலில், பள்ளி மாணவியாக, ஜாக்குலினுக்கு தங்கையாக நடித்து வந்தார். ஆனால், சமீப காலமாக அஞ்சலியை அந்த சீரியலில் காண முடியவில்லை. அஞ்சலிக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்து வருகிறார்.

புத்தாண்டு நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் கொடுத்த ‘முல்லை’ ரசிகர்கள் – வீடியோ உள்ளே

இது குறித்து ஒரு பேட்டியில் கேட்டபோது, “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். பி.காம் முடிச்சிட்டு சி.ஏ. படிச்சுட்டு இருந்தேன். பிறகு படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சின்னத்திரை பக்கம் வந்து விட்டேன். நானும் பிரபாகரனும் காதலிப்பது தெரிய வந்து, பெரிய பிரச்சினை ஆகி விட்டது. எனது வீட்டில் எங்களுடைய காதலுக்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் அம்மா –அப்பா சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஜூன் மாதத்தில் தான் கல்யாணம் நடை பெற்றது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் எங்களுடைய காமெடி கான்செப்ட்டை பார்த்து எல்லோரும் பாராட்டுவார்கள். எங்களுடைய கெமிஸ்ட்ரியும், காமெடியும் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தேன்மொழி’ சீரியலில் நான் ஜாக்லினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தேன்.

ரசிகர்களுக்கு ரொம்பப் பிடித்த ஸ்டார் குழந்தை : அனோஷ்கா அஜித் பிறந்தநாள்!

அந்த சீரியலில் நான் ஸ்கூல் யூனிபார்ம் போட்டு நடித்து இருந்தேன். அந்த சீரியல்ல இப்ப என் கதாபாத்திரம் லவ் டிராக்ல போயிட்டு இருக்கு. அதற்கு என் முகம் மெச்சூரிட்டியாக இல்லை என்றார்கள். அதனால் எனக்கு பதிலாக இன்னொரு நடிகையை நடிக்க வைக்க முடிவு பண்ணிட்டாங்க. நான் பார்க்க ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி தெரிகிறேன் என்று சொன்னார்கள். நானும் சரி என்று சொல்லி சீரியலை விட்டு விலகி விட்டேன். இப்ப நான் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறேன். பிப்ரவரி மாதம் படத்தின் சூட்டிங் நடக்கப்போகிறது. கூடிய விரைவில் நீங்கள் என்னை வெள்ளித்திரையிலும் பார்க்கலாம் என்று உற்சாகத்துடன் கூறினார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kalakka povathu yaaru anjali prabhakaran vijay tv

Next Story
இனி நான் மிசஸ் ஸ்ரீத்திகா: கல்யாணத்தை உறுதிப் படுத்திய ’கல்யாணப் பரிசு’ நடிகைSrithika wedding
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com