புத்தாண்டு நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் கொடுத்த ‘முல்லை’ ரசிகர்கள் – வீடியோ உள்ளே

Pandian Stores Mullai :

pandian stores mullai
pandian stores mullai

Pandian Stores Serial : மக்கள் டிவி-யில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சித்ரா. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ’சின்ன பாப்பா, பெரிய பாப்பா’ என்ற தொடரில் நடித்தார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்தார்.

TN local body election live : உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை – பொன்.ராதாகிருஷ்ணன்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இதில் மூன்றாவது ஜோடியாக வரும் கதிர்– முல்லைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் உள்ளது. இவர்களுடைய மெல்லிய ரொமான்ஸ், ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

Anbu mazhai ???? ithu Pothum enaku ithu pothume ❤️❤️❤️❤️❤️

A post shared by Chithu Vj (@chithuvj) on

முல்லை கதாபாத்திரத்தின் மூலம் இல்லத்தரசிகளின் வரவேற்பைப் பெற்ற சித்ரா, வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சித்ரா. அப்போது முல்லையின் ரசிகர்கள், அவருக்கு மேடையில் புத்தாண்டு பரிசளித்தனர். அந்த பரிசில் முல்லையின் படம் இருந்தது.

சீரியலில் தான் வில்லி நிஜத்தில் படு ஸ்டைலிஷ்! நீலிமாவின் கலர்ஃபுல் படங்கள்!

எதற்காக இந்த பரிசு என்று சித்ரா கேட்டதற்கு, ‘நீங்கள் மல்டி டேலண்டட். முல்லை கதாபாத்திரம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்காகவே நாங்கள் காலை 6 மணிக்கு எழுந்தவுடன் ஹாட் ஸ்டாரில் சீரியல் பார்ப்போம். காலையில் கண் விழிப்பதே உங்கள் சீரியலில் தான்’ என்று கூறினார்கள் அந்த ரசிகர்கள்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores mullai new year gift video

Next Story
சீரியலில் தான் வில்லி நிஜத்தில் படு ஸ்டைலிஷ்! நீலிமாவின் கலர்ஃபுல் படங்கள்!Neelima Rani Photo Gallery
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com