Advertisment

நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் பரட்டைக்கீரை

Diabetes : பரட்டைக்கீரையில் பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வையை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி , நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Diabetes,anti-oxidant, kidney, heart, blood,sugar, நீரிழிவு, பரட்டைக்கீரை,இன்சுலின்

Diabetes,anti-oxidant, kidney, heart, blood,sugar, நீரிழிவு, பரட்டைக்கீரை,இன்சுலின்

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமுள்ள ப்ரோக்கோலிக்கு அடுத்து, பரட்டைக்கீரையில் அதிக சத்துக்கள் உள்ளது.  உடலில் ஹார்மோன்கள் சீராக இருப்பதற்கும் இயங்குவதற்கும் இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. மேலும் இதை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவும் சீராக இருக்கிறது.   இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா 3 இருப்பதால் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மையும் இருக்கிறது.  பரட்டைக்கீரையில் பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வையை அதிகரிக்கிறது. இதில் உள்ள   வைட்டமின் சி , நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

Advertisment

இந்தக் கீரையின் சாறு எடுத்து அதனை குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.   இன்சுலின் சுரப்பை தூண்டுவதுடன், சிறுநீரகம், இருதயத்தின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.   கண்கள், பாதம் மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படக்கூடிய நாட்பட்ட நோய்களை போக்கும் தன்மை கொண்டது.  

பரட்டைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

கிளைசீமிக் இன்டெக்ஸ்: 

இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ்மிக குறைவாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  

ஸ்டார்ச்:  பரட்டைக்கீரையில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது.  

ஆன்டி-ஆக்ஸிடண்ட்: இந்த பரட்டைக்கீரையில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் நாட்பட்ட நோய்கள் குணமாகிறது.  

கலோரிகள்:  பரட்டைக்கீரையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் இதன் சாறு எடுத்து பருகலாம். 

நார்ச்சத்து:  இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக இருப்பதுடன் மலச்சிக்கல் குணமாகிறது.  

Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment