இந்த உணவெல்லாம் அடிக்கடி சாப்ட்றீங்களா? பாரம்பரியமான கம்பங்கூழ் செய்வது எப்படி?

How to make Pearl Millet Porridge Recipe in Tamil: இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பாரம்பரியமான கம்பங்கூழை எப்படி தயார் செய்வது என்பதை இங்கு பாப்போம்.

Kambu Koozh recipe in tamil: how to make Pearl Millet Porridge Recipe in Tamil

Kambu Koozh recipe in tamil: தமிழர்களின் தொன்றுதொட்ட உணவுகளுள் ஒன்றாக கம்மங்கூழ் உள்ளது. முன்னோரு காலத்தில் அனைவரது வீட்டிலும் மிகச் சாதரணமாக தயார் செய்யப்பட இந்த கம்மங்கூழ் தற்போது காணுவதே அறிய ஒன்றாக உள்ளது. இவற்றை தள்ளுவண்டி கடைகளில் மட்டுமே இப்போது நம்மால் காண முடிகிறது.

கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவாக உள்ள இந்த கம்மங்கூழ் உடல் சூட்டை தணிக்க வல்லது. இதில் உள்ள புரதச் சத்துக்கள் உடலுக்கு நல்ல வலு தருகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவாகவும் உள்ளது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பாரம்பரியமான கம்பங்கூழை எப்படி தயார் செய்வது என்பதை இங்கு பாப்போம்.

தேவையான பொருட்கள்

கம்பு – 1 கப்

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் 1 கப் கம்பை எடுத்து, அதை ஒரு மொறத்தில் இட்டு நன்றாக புடைத்து எடுத்து கொள்ளவும். பிறகு தண்ணீர் ஊற வைத்து கல் மற்றும் தூசிகளை நீக்கிய பிறகு வெளியிலில் காய வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வேளை ரெடிமேடாக கம்பு கிடைத்தால் மிகவும் நல்லது.

நன்கு காய்ந்த காம்பை மிக்சியில் போட்டு நொறுநொறுவென பதத்தில் அரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கனமான பாத்திரம் எடுத்து நீங்கள் எடுத்துக்கொண்ட கம்பு மாவுவிற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் ஓரளவிற்கு கொதி ஏறிய பிறகு கம்பு மாவுவை சேர்த்துக்கொள்ளலாம். மாவு தண்ணீருடன் சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அவற்றை ஒரு கரண்டி அல்லது அகப்பை வைத்து கிண்ட வேண்டும். தொடர்ந்து நன்றாக கிளறி போது தேவையென்றால் உப்பு சேர்த்த்து கொள்ளாலாம்.

அவை நன்றாக கொதித்து கெட்டியாகிய பிறகு கீழே இறக்கி ஆற வைக்கவும். நீங்கள் இவற்றை எப்போது தயார் செய்தாலும் அவை செட் ஆக்குவதற்கு சில மணி நேரம் கொடுப்பது அவசியமாகும். மேலும் இவற்றை மாலை அல்லது இரவு நேரத்தில் செய்து மறுநாள் காலையில் குடிப்பது மிகவும் நல்லது.

வெறும் கம்ப கூழாக குடிப்பதற்கு சிறிதளவு தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து கொண்டால் சுவையும் கூடுதலாக இருக்கும். இவற்றுக்கு சைடிஷ் ஆக உப்பு மிளகாய் போட்ட மாங்காய், வத்தல், தக்காளி தொக்கு, வெங்காயம், ஊறுகாய் போன்றவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வகை சைடிஷ்ஸுடன் ருசிக்கும் போது கூடுதலாக ஒரு சொம்பு குடிக்க தோன்றும்.

எனவே இந்த பாரம்பரியமான உணவை முயற்சி செய்ய மறந்து விடாதீர்கள்!!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kambu koozh recipe in tamil how to make pearl millet porridge recipe in tamil

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express