கண்மனி மனோகரன் இப்போது ஜீ தமிழ் டிவியில் 'அமுதாவும், அன்னலட்சுமியும்' சீரியலில் நடிக்கிறார்.
சீரியலில் பிஸியாக நடிக்கும் கண்மனி, இன்ஸ்டாகிராமிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இன்ஸ்டாவில் மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்மனியை பின்தொடர்கின்றனர்.
சமீபத்தில் கண்மனி மலேசியாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு சன்வே பிரமிடு, ட்வின் டவர், ஃபால்ஸ் என பல இடங்களில் சுற்றிப் பார்த்தபோது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார்.
பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்
உலகின் உயரமான கோபுரங்களில் இதுவும் ஒன்று.
451.9 மீட்டர் உயரம் உள்ள இந்த கோபுரம், 88 அடுக்குகளை கொண்டது. 41, 42வது தளங்களில், இரு கோபுரங்களையும் இணைக்கும் பாலம் உள்ளது. இந்த பாலமே நில மட்டத்திலிருந்து, 557 அடி உயரத்தில் (170 மீ) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டை கோபுரம் அருகில், பல்வேறு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளன.
தற்போது இந்திய குடிமக்களுக்கு visa-free entry வழங்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவும் சேர்ந்துள்ளது. மலேசியாவிற்குச் செல்ல விரும்பும் இந்தியப் பயணிகள் இப்போது விசா சம்பிரதாயங்களின் தொந்தரவு இல்லாமல் தேசத்தை சுற்றிப் பார்க்கலாம்.
இதையும் படிக்க: மலேசியாவுல நீங்க அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் இங்கே
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“