கடவுளுக்கு செய்யும் திருப்பணி போல பக்தியுடன் ஓட்டினேன் : இறுதி ஊர்வல ஓட்டுனர் கலக்கம்

Kalaignar Karunanidhi Funeral : கருணாநிதி மறைவுக்கு பிறகு காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் வரை ஊர்வலம் வாகனம் ஓட்டியவர் பற்றி தெரியுமா?

By: Updated: August 9, 2018, 10:14:18 AM

Kalaignar Karunanidhi Funeral : திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணிக்கு மறைந்தார். இவரின் மறைவை அடுத்து அவரது உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை ராஜாஜி ஹாலில் பார்த்துச் சென்ற தொண்டர்கள் மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் கருணாநிதியை தங்கள் மனதில் சுமந்து சென்றனர். உலகம் போற்றும் தமிழின மைந்தன் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில், அமரர் வாகனம் ஓட்டியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

Kalaignar Karunanidhi Funeral : ஊர்வல வாகனத்தில் திரும்பிய திமுக தலைவர்:

காவேரி மருத்துவமனை இறுதி அறிக்கை 7ம் தேதி மாலை 6.40 மணியளவில் வெளியான பிறகு, கருணாநிதியின் உடலை அவரது கோபாலப்புரம் இல்லத்திற்கு எடுத்து வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மருத்துவமனை வளாகம்  வெளியே தொண்டர்கள் கண்ணீர் கடல் பெருக்கெடுக்க, கதறும் அழுகுரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது.

Kalaignar Karunanidhi Funeral கருணாநிதி இறுதி அஞ்சலியில் கதறிய பெண்கள்

கருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் சென்றனர். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் வாகனம் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் பலவற்றையும் இடம் மாற்றிக் கொண்டிருந்தனர். பரபரப்பாலும் பதற்றத்தினாலும் அப்பகுதியில் இருள் சூழத் தொடங்கியது.

கருணாநிதி மரணம்: கடைசி நேர உருக்கக் காட்சிகள், கண்ணீரில் கோபாலபுரம்

இரவு 7 மணி முதல் காவேரி மருத்துவமனை வாயிலில் கருணாநிதியை அழைத்துச் செல்ல காத்திருந்தது ஊர்வல வாகனம். 27ம் தேதி நள்ளிரவு கோபாலபுரத்தில் இருந்து உயிருடன் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். முதல் முறையாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்ற கருணாநிதி இறுதி ஊர்வல ஆம்புலன்சில் சடலமாக திரும்பினார்.

கருணாநிதியின் பூத உடலை சுமந்த இறுதி ஊர்வல வாகனத்தை இயக்கியவர்:

7ம் தேதி இரவு சுமார் 8.00 மணியளவில், காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது ஆம்புலன்ஸ். அந்த ஆம்புலன் உள்ளே, கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்தார் ஓட்டுனர் பி.ஆர்.எம்.எம். சாந்தகுமார். இவருக்கு வயது 58. தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு இறுதி ஊர்வல வண்டி ஓட்டியவர் இவர் தான்.

Kalaignar Karunanidhi Funeral இறுதி ஊர்வல வாகனம் ஓட்டிய சாந்தகுமார்

1977-ம் ஆண்டு முதல் ‘ஹோமேஜ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார் சாந்தகுமார். இவர் 94 வயதில் மறைந்த கருணாநிதிக்கு மட்டும் அமரர் வாகனம் ஓட்டியவர் அல்ல. 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இவரே வாகனம் ஓட்டினார். மேலும் நடிகர் சிவாஜிகணேசன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோருக்கும் இவர் தான் அமரர் ஊர்தியை இயக்கி இருக்கிறார்.

Karunanidhi Burial LIVE UPDATES: கருணாநிதிக்கு மெரினாவில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்துகிறார்

பல தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் வாகனம் ஓட்டிய இவர், திமுக தலைவர் கருணாநிதிக்கும் இறுதி ஊர்வல வாகனத்தை ஓட்டியது கடவுளுக்கு செய்யும் திருப்பணிப் போல் உணர்ந்ததாக கூறுகிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Karunanidhi funeral driver

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X