கொழுப்பை கரைப்பு, ஜீரண சக்தி தரும் கறிவேப்பிலை சாதம்... இப்படி செஞ்சு அசத்துங்க!
Easy and simple steps to make Curry Leaves rice (Karuveppilai saatham) in tamil: ஏராளமான ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகளை கொண்டுள்ள கறிவேப்பிலையில் எப்படி டேஸ்டியான கறிவேப்பிலை சாதம் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
Easy and simple steps to make Curry Leaves rice (Karuveppilai saatham) in tamil: ஏராளமான ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகளை கொண்டுள்ள கறிவேப்பிலையில் எப்படி டேஸ்டியான கறிவேப்பிலை சாதம் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
karuvepillairice in tamil: நம்முடை வீடுகளில் எளிதில் கிடைக்கும் ஒன்றாக கறிவேப்பிலை உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றன. இவற்றில் ஃபைபர், புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
Advertisment
கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட உணவுகளை நாம் அதிகம் சாப்பிடுவதால் வயிறு, குடல் நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்குகின்றன.
இப்படி ஏராளமான ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகளை கொண்டுள்ள கறிவேப்பிலையில் எப்படி டேஸ்டியான கறிவேப்பிலை சாதம் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
Advertisment
Advertisements
கறிவேப்பிலை சாதம் செய்யத் தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
கடுகு, உளுந்து - தலா 1/2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
வேர்க்கடலை - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
பொடிக்க:
மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
முந்திரி - 4,
கறிவேப்பிலை - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6
கறிவேப்பிலை சாதம் செய்முறை
முதலில் கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் பாத்திரத்தில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுக்கவும்.
பின்னர், மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
இதன்பிறகு, கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, வேர்க்கடலை, கடலைப் பருப்பு போட்டு தாளித்துக்கொள்ளவும்.
பிறகு, கருவேப்பிலை பொடி, சாதம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
இப்போது கீழே இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான கருவேப்பிலை சாதம் தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“