கடந்த 5-6 மாதங்களாக டயட்டில் அவர் உணவை முழுவதுமாகத் தவிர்த்து தண்ணீர் மட்டுமே குடித்துள்ளார். தண்ணீர் காய்கறிகள், பழங்களை மட்டுமே சாப்பிட்டுள்ளார். மேலும் அதிகமாக உடற்பயிற்சி செய்துள்ளார். முழுவதுமாக ஆன்லைன் விடியோக்களில் கூறியபடி அவர் டயட்டை பின்பற்றிய அப்பெண், ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாகக் குறைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களால் உலகம் ஆனது. நமது உடலும் பஞ்ச பூதம்தான். 3-ல் 2 பங்கு உலகத்துல தண்ணீர்தான் இருக்கு. 2 பங்கு தண்ணீரில் ஒரு சதவீதம் தண்ணீர் அளவு அதிகரித்தால்கூட கடல் நீரின் அளவு அதிகரித்து உலகம் நீரில் மூழ்க வாய்ப்புள்ளது. இதேபோல் தான் உடலிலும் மினரல் அளவு மாறும்போது சிக்கல் ஏற்படும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
சாதாரண குடிநீர் உள்ள கிளாஸில் உருளைக்கிழங்கு வைக்கும்போது அது நீரில் மூழ்கி அதன் எடை அதிகரித்து அளவுபெரிதாகிறது. மற்றொரு விதமாக, உப்பு கலந்த நீரில் உருளைக்கிழங்கை வைக்கும்போது, அதன் உருவம் சுருங்கி எடை குறைகிறது. அதிக உப்புத்தன்மை உடைய பொருளில் எளிதில் நீர்புகும் என்பது அறிவியல்பூர்வ உண்மை.
நமது உடலில் உப்பு சமநிலை தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். நீர்த்தன்மையை இழந்து தண்ணீர் அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில் இருந்து உப்பு அதிகமான இடத்துக்கு போக வேண்டிய ஆஸ்மோட்டிக் பேலன்ஸ்ங்கிறது மாறி போறதுனால உடல்நிலை தலைகீழா மாறிவிடுகிறது.
உணவுகளின் அளவை குறைத்து அதன்மூலம் உடல் எடைகுறைப்பு முயற்சி செய்ய வேண்டாம், சரியான அளவில் உணவுகள் சாப்பிட்டு எடை குறைப்பு மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் கார்த்திகேயன்
காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம். பீட்சா, பர்கர் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். டயட்டில் இதுபோன்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவு சாப்பிடும்போது உடல் நெகட்டிவ் பேலன்ஸில் சென்று பிரச்னையை ஏற்படுத்தும். வெறும் தண்ணீர் குடித்து எடை குறைப்பு செய்வது என்பது விபரீத முயற்சி என்றும் கூறுகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
மக்களுக்கு டயட் குறித்த புரிதல் வேண்டும். ஆன்லைனில் டயட் குறித்த கட்டுரைகள், வீடியோக்கள் நிறைய உள்ளது. அதில் நல்லது கெட்டது எது என்று பிரித்து பார்க்க வேண்டியது அவசியம். எக்ஸ்டீரிம் டயட் எதுவும் முயற்சிக்க வேண்டாம். சரிவிகித உணவு முறை அங்கீகரிக்கப்பட்ட டயட் முறையை பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.