பூண்டு உரிக்க சூப்பர் ஹேக்… இப்படி பயன்படுத்துங்க…!
how to peel garlic quickly in tamil: ஒரு முழு பூண்டை 20 விநாடிகளுக்கு மைக்ரோவேவ்வில் வைக்கவும். பிறகு மேலிருந்து துண்டுகளாக நறுக்கினால், ஒரே நேரத்தில் நிறைய பூண்டுகளை உரிக்கலாம்.
Kitchen hacks in tamil: ஒரு டிஷ் தயாரிக்கும் போது பெரும்பாலும் தயாரிப்பு நேரம் அதற்குண்டான சமையல் நேரத்தை தாண்டி செல்கிறது. இதனால், நம்மில் பலர் சமையலறையில் நேரத்தையும் முயற்சியையும் சேமிக்க உதவும் எளிதான ஹேக்குகளைத் தேடுகிறோம். அப்படி நாம் சமைக்க தயாராகும் போது நாம் அதிகம் நேரம் செலவிடும் ஒரு பொருளாக பூண்டு இருக்கிறது.
Advertisment
இந்த பூண்டை சீக்கிரமாக உரிக்க பல எளிய ஹேக்குகள் உள்ளன. சமையல் வல்லுநர் சரண்ஷ் கோயிலா சமீபத்தில் பூண்டு உரிப்பதற்கான சில சூப்பர் பயனுள்ள ஹேக்குகளைப் பகிர்ந்துள்ளார்.
“பூண்டு உரிப்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான். பூண்டின் அளவு மற்றும் எத்தனை உரிக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து நிறைய இருக்கிறது, ”என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
பூண்டு உரிக்க சூப்பர் ஹேக் 1:
ஒரு முழு பூண்டை 20 விநாடிகளுக்கு மைக்ரோவேவ்வில் வைக்கவும். பிறகு மேலிருந்து துண்டுகளாக நறுக்கினால், ஒரே நேரத்தில் நிறைய பூண்டுகளை உரிக்கலாம். அவையும் எளிதில் வெளியே வரும்.
இருப்பினும், இதில் உள்ள குறைபாடு என்னவென்றால், அவை கொஞ்சம் சமைக்கப்பட்டவையாக இருக்கும். எனவே அவற்றை உங்களால் சில உணவுகளுக்கு பயன்படுத்த முடியாது. ஆனாலும், அவற்றை பெரும்பாலனா உணவுகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார் சரண்ஷ் கோயிலா.
பூண்டு உரிக்க சூப்பர் ஹேக் 2:
இரண்டு கிண்ணங்களில் அல்லது காக்டெய்ல் ஷேக்கரில் அல்லது மூடியுடன் கூடிய பெரிய ஜாடியில் பூண்டு சேர்த்து குலுக்கவும். "இது பெரிய பூண்டு பற்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. ஆனால் இது சிறிய பூண்டு பற்களின் தோல்கள் அவ்வளவு எளிதில் உரிபடாது.
பூண்டு உரிக்க சூப்பர் ஹேக் 3:
ஒரு முழு பூண்டின் மேல் கத்தியை அழுத்தவும். இது அவற்றை எளிதில் உடைகிறது. "இந்த ஹேக் அனைத்து சமையல் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும் உன்னதமான முறையாகும். இந்த எளிய செய்முறை பூண்டு பற்களை எளிதில் வெளியே கொண்டு வர முடியும். ஆனால், நீங்கள் நிறைய பூண்டு பற்களை உரிக்க வேண்டியிருந்தால், இந்த செய்முறை உங்களை சோர்வடைய செய்யும்.”என்று சமையல் வல்லுநர் சரண்ஷ் கோயிலா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.