Advertisment

சென்னா இரவில் ஊறவைக்க மறந்துட்டீங்களா? நோ ப்ராப்ளம்… சிம்பிள் ட்ரிக் இருக்கு!

Forgot To Soak Chana Overnight? you can Try This 10-Min Trick in tamil: சென்னா அல்லது வெள்ளை கொண்டைக்கடலை இரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்துவதில் அதன் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Kitchen Hacks in tamil: simple trick to Soak Chana

Kitchen Hacks in tamil: சென்னா அல்லது வெள்ளை கொண்டக்கடலை வட இந்தியர்களின் உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கும் உணவுப்பொருள் ஆகும். இவை மாலை நேரத்திற்கு ஏற்ற சுவையான ஸ்நாக்ஸ்களை தயார் செய்யவும், சாலட்கள் தயார் செய்யவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், சைவ உணவுகளிலும், சப்பாத்தி மற்றும் பூரிகளுக்கு ஏற்ற சைடிஷ் தயாரிப்பதிலும் இவை பயன்படுத்தப்பகின்றன.

Advertisment
publive-image
வெள்ளை கொண்டைக்கடலை

வெள்ளை கொண்டைக்கடலை அற்புத பயன்கள்:

சென்னா அல்லது வெள்ளை கொண்டைக்கடலை இரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்துவதில் அதன் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. இவற்றை நாம் அன்றாட உட்கொண்டு வருவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

இதயத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை வெள்ளை கொண்டைக்கடலை அள்ளித் தருகிறது. இவற்றில் உள்ள செலினியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்புச்சத்துக்கள் இதய அபாயங்களை கவனித்துக்கொள்வதோடு, கொழுப்பையும் குறைக்கின்றது.

வெள்ளை கொண்டைக்கடலை நீரிழிவு நோயை சீராக வைத்துக்கொள்ளவும், அதன் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. 1 கப் கொண்டைக்கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்து இருப்பதால் அவை, நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நன்மையைத் தருகின்றன. மேலும், இது இரத்தத்தில் திடீர் இன்சுலின் அதிகரிப்பையும் தடுக்கிறது.

publive-image
வெள்ளை கொண்டைக்கடலை

கொண்டை கடலையில் காணப்படும் ராஃபினோஸ் எனப்படும் கரையக்கூடிய உணவு நார்ச்சத்து, செரிமான செயல்பாட்டில் பெருங்குடலுக்கு உதவுகிறது. மேலும், இது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தைப் பெறவும் உதவுகிறது.

இப்படியாக ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் வெள்ளை கொண்டைக்கடலையை நம்முடைய உணவுகளில் கண்டிப்பாக சேர்க்கலாம்.

சென்னா இரவில் ஊறவைக்க மறந்துவிட்டீர்களா? இந்த ட்ரிக்ஸை முயற்சிக்கவும்:

சென்னா அல்லது வெள்ளை கொண்டைக்கடலை கொண்டு நாம் ஏராளமான சைடிஷ்களை சமைத்து ருசிக்கலாம். ஆனால், அவற்றை தயார் நீங்கள் வெள்ளை கொண்டைக்கடலையை ஒரு இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஊற வைக்க மறந்து விட்டால் இந்த குறிப்பை நிச்சயம் முயற்சிக்கவும்.

publive-image

சென்னா ஊறவைக்க சிம்பிள் டிப்ஸ்:

முதலில் ஒரு பாத்திரம் அல்லது கடாயில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பிறகு அந்த தண்ணீரை ஒரு மூடி அல்லது காற்று புகாத கொள்கலனுக்கு மாற்றவும்.

பின்னர், கழுவிய சென்னா அல்லது வெள்ளை கொண்டைக்கடலையை உடனடியாக அந்தப் பாட்டிலினுள் சேர்க்கவும்.

பிறகு பாட்டிலை நன்றாக மூடி வைக்கவும்.

10-15 நிமிடங்களுக்கு மூடி வைத்த பின்னர், பாட்டிலை திறந்து பார்த்தல் ஓரளவுக்கு நன்றாக ஊறிய வெள்ளை கொண்டைக்கடலை இருக்கும்.

பிறகு அவற்றை உங்கள் சமையலில் பயன்படுதத்தலாம். பிரஷர் குக்கரில் அவற்றை சமைப்பது வேலையை இன்னும் எளிமையானதாக மாற்றி விடும்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Healthy Food Tamil Food Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment