Advertisment

பச்சை தக்காளி வேகமாக பழுக்க வைப்பது எப்படி? எக்ஸ்பர்ட் டிப்ஸ்

நம்மில் பெரும்பாலோர் தக்காளியை ஃபிரிட்ஜில் சேமிக்க விரும்புகிறோம், ஆனால் செஃப் பங்கஜ் பதூரியா கூற்றுப்படி, அவற்றை சேமிப்பதற்கு இது சரியான வழி அல்ல.

author-image
WebDesk
New Update
green-tomato-plant

How to Store Tomatoes

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவை நிறைந்த பழுத்த தக்காளி, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சமையல் குறிப்புகளின் முதுகெலும்பாகும். விலை கொடுத்து வாங்கினாலும் தக்காளியை அதிக நாள் சேமிக்க முடியாது. ஃபிரிட்ஜில் சேமித்தாலும் சில நாட்களில் அழுகிவிடும்.

Advertisment

தக்காளி நீண்ட நாட்கள் புதிதாக இருக்க அவற்றை எப்படி சேமிப்பது?        

நம்மில் பெரும்பாலோர் தக்காளியை ஃபிரிட்ஜில் சேமிக்க விரும்புகிறோம், ஆனால் செஃப் பங்கஜ் பதூரியா கூற்றுப்படி, அவற்றை சேமிப்பதற்கு இது சரியான வழி அல்ல.

தக்காளி தண்டு கீழே இருக்குமாறு, வெளியே சேமித்து வைக்கவும்.

தக்காளி வாங்கி வந்த உடன் அதன் காம்பு பகுதியில் ஒரு சொட்டு நெய் தடவி விடவும். நெய் தடவியபகுதி அடியில் இருக்குமாறு அதை அடுக்கி வைத்துவிட்டால் போதும். இதை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. வெளியில் வைத்தாலே ஒரு வாரம் வரையில் தக்காளி புதிதாக இருக்கும், என்று  பதூரியா கூறினார்.

இதையும் படிக்க:

ஃபிரிட்ஜில் விஷமாக மாறும் 4 உணவுகள்- ஆயுர்வேத மருத்துவர் அறிவுரை

பச்சை தக்காளி பழுக்க

ripe-tomato

தக்காளி பழுக்க வெப்பம் தேவை. தக்காளி எவ்வளவு சூடாக இருக்கிறதோ, அவ்வளவு விரைவாக அது பழுக்கும்.

ஒரு காகிதப் பை, அட்டைப் பெட்டி அல்லது காலியான சமையலறை டிராயரில் பழுக்காத தக்காளியுடன், பழுத்த வாழைப்பழத்தை வைக்கவும். வாழைப்பழம், எந்தவொரு பழத்தையும், காய்கறிகளையும் விரைவாக பழுக்க வைக்க உதவும்.

தக்காளி கொஞ்சம் பழுத்திருந்தாலும், இன்னும் சிறிது தேவைப்பட்டால், அவற்றை உங்கள் பழக் கூடையில் வைக்கவும். அவற்றைச் சுற்றியுள்ள பழங்கள் ஈத்தீனைக் கொடுத்து அவற்றை விரைவில் பழுக்க வைக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment