Kodo millets pongal in tamil: தென்னிந்திய உணவுகளில் பிரபலமான உணவாக பொங்கல் உள்ளது. நம்முடைய வீடுகளில் தயார் செய்யப்படும் பொங்கலோடு சிறிதளவு சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் காலை உணவு சிறப்பாக அமையும். நாம் செய்யும் இந்த பொங்கலுக்கு எப்போதும் பயன்படுத்தும் பச்சை அரிசியை விட வரகரிசியில் செய்து வந்தால் கூடுதல் சுவையும் உடலுக்கு நல்ல வலுவும் கிடைக்கும்.
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் வரகரிசி சிறுநீரகம், ரத்த ஓட்டம், ஆண்மை குறைபாடுகள், நீரிழிவு, இதயம் போன்ற உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுகிறது. இப்படி மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படும் வரகரிசியில் பொங்கல் எப்படி செய்வது என்ற படிகளை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வரகு - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4கப்
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சூர்யகாந்தி எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
முந்திரிபருப்பு - 10 - 15
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
உளுந்து - டீ ஸ்பூன்
பெங்காயம்
நீங்கள் செய்ய வேண்டுயவை
ஒரு சிறிய பாத்திரம் எடுத்து வரகரிசியை அதில் இட்டு நன்கு ஊற வைக்கவும். இதற்கிடையில், ஒரு சிறிய பாத்திரம் அல்லது பேன் எடுத்து அதில் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு அதை ஊற வைத்துள்ள வரகரிசியுடன் சேர்த்து அலசி எடுத்துக்கொள்ளவும்.
வரகரிசியை பெரும்பாலும் அதிக நேரம் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் சில நிமிடங்களுக்கு ஊற வைத்து நன்கு அலசிக் கொள்வது மிகவும் நல்லது.
இப்போது ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து அலசி வைத்துள்ள வரகரிசி மற்றும் பாசிப்பருப்பை இட்டு அவை வேக தேவையான தண்ணீர் சேர்த்து கொள்ளவும். மேலும் அவற்றோடு பச்சை மிளகாய், இஞ்சி, 1 டீ ஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குக்கர் என்றால் 4 - 5 விசில் போதுமானது.
பொங்கல் நன்கு வெந்த பிறகு அவற்றை தாளிக்க, தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அதில் நெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் விடவும். அவை சூடானதும், முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை ஓரளவிற்கு வறு பட்டதும் அவற்றோடு உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். கடைசியாக சீரகம் சேர்த்து வறுக்கவும். அவை நன்கு வறுபட்ட பிறகு அவற்றோடு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளலாம்.
இவை தயார் ஆனதும், முன்னர் வேக வைத்துள்ள பொங்கலை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர் பார்த்த வரகரிசி பொங்கல் தயாராக இருக்கும். அவற்றோடு சாம்பார் அல்லது தேங்காய் சட்னி அல்லது கத்தரிக்காய் கோஸ் சேர்த்துக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.