Kotagiri Summer Trip : மனிதன் தான் வாழும் இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்று, தங்கி, மகிழ்ந்து, புத்துணர்வு பெற்று திரும்புதல் சுற்றுலாவாகும். ‘சுற்றுலா’ எனும் சொல் எவ்வாறு உருவாயிற்று என்னும் வினா எழுகிறது. ‘Tour’எனும் ஆங்கிலச் சொல்‘TORNUS எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்தது.
டோர்னஸ் என்றால் சக்கரம். எனவே, இச்சொல் சுற்றி வருவதைக் குறிக்கிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தென்னிந்தியாவில் உள்ள சில சுற்றுலா தளங்களைப்பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
Kotagiri Summer Trip
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும் அதன் அழகிய சூழல் மற்ற இடங்களுக்கு சளைத்தது இல்லை.
தென்னிந்திய மலைப்பகுதிகளில் முதன்முதலில் மக்கள் தேடும் பட்டியலில் இருக்கும் மலைப்பகுதி ஊட்டி. ஒரு வருடத்திற்கு சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கோத்தகிரியில் ஒரு இன்பச் சுற்றுலா
ஆனால் ஊட்டிக்கு 30 கி.மீ தூரத்திலும், குன்னூரிலிருந்து 17 கி.மீ தூரத்திலும் கோத்தகிரி மலை உள்ளது. இந்த நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் உள்ளது.
மேலும் நேரு பூங்கா கோத்தகிரி நகரத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தனியார் பூங்கா பயணிகளுக்கு ஓய்வு நேரத்தை கழிப்பதற்கான பல நடவடிக்கைகளை கொண்டுள்ளது.
இந்தப் பூங்காவினுள் கோத்தகிரியின் பூர்வீக குடிகளான கோத்தர்களின் கோயில் ஒன்று உள்ளது. இந்தப் பூங்காவினுள் மக்கள் கூடுவதற்கான மையம் ஒன்றும் , தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவாக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றும் உள்ளது.
பொதுமக்கள் உபயோகத்திற்கான விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. சமீப காலமாக கோத்தகிரியில் விளையும் அரிய காய்கறி வகைகளை பார்வைக்கு வைப்பதற்காக காய்கறி கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும் படிக்க : செம த்ரில் டூர் வேணுமா: நெல்லியம்பதி போகலாம் வாங்க
காரைக்காலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தளங்கள் :
புதுவை அரசின் காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 99 இந்து கோவில்கள் இருப்பதாக அறியப்படுகிறது. தமிழ்ச் சைவ நாயன்மார்களாலும், வைணவ ஆழ்வார்களாலும் வழிபட்டு பாடப்பெற்ற பலத்திருத்தலங்கள் காரைக்காலிலும் அதனைச்சுற்றியுள்ள தமிழக ஊர்களிலும் பரவிக்கிடப்பது இங்கு பக்தர்கள் வருகை புரிவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்து சைவ சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற 276 சிவ தலங்களில் நான்கு கோவில்கள் இங்கு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காரைக்காலுக்கு ரயில் மூலம் செல்லலாம். காரைக்காலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் நாகூர் ரயில் நிலையமாகும். அங்கிருந்து காரைக்காலுக்கு செல்ல டாக்சி அல்லது பஸ்சில் செல்லலாம். மேலும் விமான நிலையம் திருச்சியில் அமைந்துள்ளது.
பட்டதாகல்
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்கும் இந்த பகுதி, பல சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு எட்டாத ஒரு அதிசயமாக இன்றும் இருக்கிறது. இந்த தளங்களில் காணப்படும் ஆலயங்கள் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. மேலும் இந்த ஆலயங்களுடன் ஜெயின் ஆலயங்களும் ஒன்றாக இணைந்தே காணப்படுவது நமக்கு பல்வேறு ஆச்சரியங்களை மனதில் ஏற்படுத்துகிறது.
அத்துடன் மேலும் இந்த ஆலயங்கள் 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை என்றும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இங்கே உள்ள ஒரு சிறிய குக்கிராமம், மாலபிரபா நதியில் அமைந்து நம் மனதை வருடுகிறது. அத்துடன் சாளுக்கிய கட்டிடக்கலையை முன்னிலைப்படுத்தும் 10 ஆலயங்களும் இங்கே அமைந்து நம் மனதை அமைதி கொண்டு நிரப்புகிறது.
பட்டடக்கல் என்பது, இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களுள் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது வட கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்துல் உள்ள மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது பாதமியில் இருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவிலும், அய்கொளெயில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இங்குள்ள ரயில் நிலையம் பாதாமி ரயில் நிலையமாகும். அங்கிருந்து, ஒரு டாக்ஸி அல்லது பேரூந்தில் செல்லலாம். மேலும் சாம்ப்ரா பெல்காம் விமான நிலையம் மூலமாகவும் செல்லலாம். பெல்காமிலிருந்து உள்ளூர் டாக்சிகள் கிடைக்கின்றன.
தஞ்சாவூர் (Thanjavur) மாநகரம்
தஞ்சை என்பதற்கு “குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி” என்று பொருள் . தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். தஞ்சாவூர் (Thanjavur) மாநகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும். இதை தஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது.
பிற்கால சோழர்களின் தலைநகரான விளங்கியது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சையில் தான் அதிக அளவில் நெல் பயிர் விளைகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகவும், உலக புகழ் பெற்றதாகவும் தஞ்சை பெரிய கோவில் விளங்குகிறது.
அதன் சிறப்புக்களாக, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது.உலக புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமான பெரிய கோவில் உள்ளது. உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது. தஞ்சாவூர் ஓவியங்களும்,கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை.