Advertisment

17 கி.மீ தூரம் பின்னால் நடந்து சிலம்பம் சுற்றிய சிறுமி; 3 உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 17 கிலோ மீட்டர் தூரத்தை பின்னால் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றிய சிறுமி; மூன்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

author-image
WebDesk
New Update
17 கி.மீ தூரம் பின்னால் நடந்து சிலம்பம் சுற்றிய சிறுமி; 3 உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த பாபு, கிருத்திகா தம்பதியினரின், மூத்த மகள் 11 வயதான  தீர்த்தா பாபு. இவருக்கு சிறு வயதில் இருந்தே தற்காப்பு கலைகளில் அதீத ஈடுபாடு காரணமாக, சின்னவேடம்பட்டி பகுதியில் முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சிலம்ப பயிற்சிகளை முறையாக கற்று கொண்டு வருகிறார்.

Advertisment

publive-image

இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் ஒரு கைகளில் சிலம்பம் சுற்றியபடி மூன்று மணி நேரம் இலக்காக, நிர்ணயம் செய்யபட்ட 17 கிலோ மீட்டர் தூரத்தை பின்னால் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றி வர வேண்டும் என்ற போட்டியில் 2 மணி நேரம் 59 நிமிடம் 59 விநாடிகளில் செய்து முடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

publive-image

இதையும் படியுங்கள்: வியர்க்க, விறுவிறுக்க இரவில் ‘வாக்கிங்’ போகும் குஷ்பூ: 21 கிலோ குறைத்த ரகசியம் இதுதானா?

இந்திய நாட்டில், இதுவரை யாரும் இதுபோன்ற முயற்சியை முயற்சிக்காத நிலையில், அதனை செய்து வெற்றியும் கண்டு சிலம்ப துறையில் தீர்த்தா பாபு புதிய தடம் பதித்துள்ளார்.

publive-image

இதனை நேரடியாக ஆய்வு செய்த இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், அமெரிக்கன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், மற்றும்  யூரேப்பியன் புக் ஆப் வேல்ர்ட் ரெக்கார்ட்ஸ், என மூன்று சாதனை அமைப்புகள் இந்த சாதனையை அங்கீகரித்து தீர்த்தா பாபுவுக்கு சான்றிதழ், பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் கோப்பையை வழங்கினர்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment