சிலம்பம், ஓவியம் உட்பட 8 கலைகளை ஒரு மணி நேரத்தில் நிகழ்த்திய 1200 மாணவர்கள்; கோவையில் உலக சாதனை
கோவையில் சிலம்பம், கராத்தே, குங்பூ, யோகா, ஸ்கேட்டிங், அம்பு எய்தல், ஓவியம் வரைதல், பரதநாட்டியம் போன்ற போட்டிகளை ஒரு மணி நேரத்தில் செய்து உலக சாதனை படைக்கபட்டது
இந்தியாவில் முதல் முறையாக தற்காப்பு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட எட்டு கலைகளை ஒரு மணி நேரத்தில் ஒரே இடத்தில் நிகழ்த்தி 1200 மாணவர்கள் கோவையில் உலக சாதனை படைத்துள்ளனர்.
Advertisment
கோவை அடுத்த தீத்திபாளையம் சி.எம்.சி பள்ளி மைதானத்தில் பைட்டர்ஸ் அகாடமி சார்பில் எட்டு பாதுகாப்பு கலைகளை மாணவர்கள் நிகழ்த்தி நோபல் வோல்டு ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
இந்த நிகழ்வில் 15 மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா என மூன்று மாநிலங்களில் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இந்த உலக சாதனையை நிகழ்த்தினர். இதில் சிலம்பம், கராத்தே, குங்பூ, யோகா, ஸ்கேட்டிங், அம்பு எய்தல், ஓவியம் வரைதல், பரதநாட்டியம் போன்ற போட்டிகளை ஒரு மணி நேரத்தில் செய்து சாதனை படைக்கபட்டது.
இந்த சாதனையை அங்கீகரித்த நோபல் வோல்டு ரெக்காட் நிறுவனம் இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கியது.
குறிப்பாக குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களது திறமைகளை வெளி கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்வு நடத்தபட்டதாகவும், குழந்தைகள் அலைபேசி மோகத்தை தவிர்த்து விளையாட்டில் ஆர்வம் செலுத்த இம்மாதிரியான போட்டிகள் அவர்களை ஊக்குவிக்கும் எனவும், அனைத்து மாணவர்களும் பிழையின்றி போட்டிகளில் பங்கெடுத்து உள்ளதாகவும் பைட்டர் அகாடமி தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil