Kulambu Varieties in Tamil: நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று ஆகும். ஏனென்றால் உடலுக்கு தேவையான பல சத்துகளை இவை தான் வழங்குகின்றன. இவற்றில் தினம் ஒரு வகை காய்கறியை நாம் நமது உணவுகளில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.
அந்த வகையில் வெண்டைக்காயை நம்முடைய அன்றாட உணவுவில் சேர்த்துக்கொள்வதால் நமக்கு ஏகப்பட்ட பயன்கள் கிடைக்கின்றன. ஞாபகசக்தி முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரையிலும், மூளை நோய், நீரிழிவு நோய், உடல் எடை போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
இப்படி ஏரளமான நன்மைகளை கொண்டுள்ள வெண்டைக்காயில் எப்படி காரசாரமான புளிக்குழம்பு தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்
தாளிக்க
நல்லெண்ணெய் – தேவையான அளவு
வெந்தயம்
கடுகு
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் – 2
பிஞ்சு வெண்டைக்காய் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி – 1
குழம்பு மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு
வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்முறை
முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி சிறிது எண்ணெயில் போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி மசிய வதங்கிய பின்னர் புளிக் கரைசல், உப்பு, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இவை நன்கு கொதித்து வந்த பின்னர் முன்பு வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை அதில் சேர்த்து தண்ணீர் சுண்டியதும் கீழே இறக்கி பரிமாறவும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“