பூந்தி பொரிக்காமல் லட்டு: தீபாவளிக்கு இப்படி சிம்பிளா செய்து பாருங்க!

laddu seivathu eppadi tamil: இந்த சுவையான இனிப்பை தயார் செய்யும்போது அனைவருமே பூந்தி பொரித்து செய்வார்கள். ஆனால், நாம் இன்று பூந்தி பொரிக்காமலே எப்படி லட்டு தயாரிப்பது என்று இங்கு பார்ப்போம்.

laddu recipe in tamil: laddu preparing without frying boondi tamil

south indian laddu recipe in tamil: தீபாவளி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பட்டாசும், இனிப்பு வகைகளும் தான். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி பகிர்ந்தாலும், சிலர் பாரம்பரியமான இனிப்புகளை தங்களுடைய வீட்டில் தயார் செய்யும் வழக்கம் உண்டு. இந்த பாரம்பரியமான இனிப்பு வகைகளில் லட்டு முக்கியம் இடம் பிடிக்கிறது. ஏனென்றால், இவற்றை தயார் செய்வது ரொம்பவே ஈஸியாகும்.

இந்த சுவையான இனிப்பை தயார் செய்யும்போது அனைவருமே பூந்தி பொரித்து செய்வார்கள். ஆனால், நாம் இன்று பூந்தி பொரிக்காமலே எப்படி இந்த சுவைமிகுந்த லட்டு தயாரிப்பது என்று இங்கு பார்ப்போம்.

பூந்தி பொரிக்காமல் லட்டு செய்யத் தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு – 300 கிராம்
சர்க்கரை – 1 1/2 கப்
ஏலக்காய் தூள் (விரும்பினால்)
கலர் பொடி
நெய் – சிறிதளவு
முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழம் – 2 + 2 ஸ்பூன்

லட்டு சிம்பிள் செய்முறை:

முதலில் கடலை பருப்பை எடுத்து அவற்றை சுத்தமான தண்ணீரில் 2 அல்லது 3 முறை நன்கு அலசி கொள்ளவும்.

பிறகு தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரத்திற்கு ஊற வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்சியில் இட்டு நொறுநொறுப்பு பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து அவற்றை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெய் இட்டு பொரிக்கவும்.

பொரித்த உருண்டைகளை நன்கு ஆற வைத்துக்கொள்ளவும். அவை ஆறிய பிறகு மிக்சியில் இட்டு நொறுநொறுப்பு பதத்தில் அரைக்கவும்.

பிறகு, ஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை இட்டு மிதமான சூட்டில் வைத்து பாகாக மாற்றவும்.

தொடர்ந்து கலர் பொடி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு முன்பு நொறுநொறுப்பாக அரைத்து வைத்துள்ள லட்டு மாவை அதில் சேர்க்கவும்.

இவற்றை நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இதற்கிடையில், முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழத்தை நெயில் இட்டு வறுத்துக்கொள்ளவும்.

பிறகு அவற்றை நன்கு மிக்ஸ் செய்து வைத்துள்ள லட்டு மாவுடன் சேர்த்துக்கொள்ளவும்.

இந்த கலவை நன்கு ஆறிய பிறகு அவற்றை லட்டு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.

இப்போது தீபாவளி இனிப்பு “லட்டு” தயராக இருக்கும். அவற்றை பகிர்ந்து ருசித்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Laddu recipe in tamil laddu preparing without frying boondi tamil

Next Story
தினமும் இத்தனை பாதாம் ஊறவைத்து சாப்பிடுங்க… என்னென்ன நன்மை தெரியுமா?benefits of almonds in tamil: how many almonds to eat per day tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com