பிரதமர் மோடி சமீபத்திய பயணத்தால் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் இப்போது லட்சத்தீவு பக்கம் திரும்பியுள்ளது.
லட்சத்தீவு இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும்.
கேரளாவின் கொச்சியிலிருந்து 440 கி.மீட்டர் தொலைவில் லட்சத்தீவு உள்ளது.
லட்சத்தீவு என்பது 36 சிறிய தீவுகளின் கூட்டமாகும். இதில், கவரட்டி, அகட்டி, அமினி, கத்மட், கிலாடன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய் போன்ற 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில் கொச்சியில் இருந்து கப்பல் விமானத்தில் லட்சத்தீவு செல்வது எளிது என இந்தியா டூரிஸம் தென்மண்டல இயக்குநர் வெங்கடேசன் தத்தாத்ரேயன் தெரிவித்தார்.
லட்சத் தீவில் என்ன விசேஷம்எப்படி செல்வதுஎவ்வளவு செலவு?
இந்திய சுற்றுலாத்துறை சார்பில் மத்திய தொல்லியல் துறைக்கு உட்பட்ட மதுரை கீழக்குயில்குடி சமணர் மலையில் நடந்த பொங்கல் விழாவில் சமணர் மலைக்கான கையேட்டை வெளியிட்டு அவர் கூறியதாவது:
”லட்சத்தீவில் சுற்றுலா அலுவலகம் உள்ளது. அரசு ஊழியர்கள் அங்கு சென்று வேலை செய்ய பர்மிட் தேவையில்லை. 'சமுத்ரா பாக்கேஜ்' எனப்படும் திட்டத்தின் கீழ் கேரளாவின் கொச்சியில் இருந்து கப்பல்கள் கவரத்தி தீவு செல்கின்றன. அங்கிருந்து படகுகள் மூலம் லட்சத்தீவின் பல்வேறு தீவுகளுக்கு செல்ல முடியும். டூர் ஆப்பரேட்டர்கள் மொத்தமாக அனுமதி பெற்று விடுவதால் கப்பலில் செல்லும் பயணிகளுக்கு தனி அனுமதி தேவையில்லை.
/indian-express-tamil/media/media_files/NWyqJFAMJCcKlPcGpNzN.jpg)
தனியாக செல்பவர்களுக்கு 'ஆன்லைன் மூலம்' அனுமதி பெற வேண்டும்.
கொச்சியில் இருந்து விமானத்தில் அகாட்டி தீவு சென்று லட்சத்தீவை அடையலாம். சிறிய ஏர்போர்ட் என்பதால் செல்வதற்கு அனுமதி கட்டாயம். அனுமதி பெற்ற ஒரு மாதத்திற்குள் செல்லலாம். அங்கு நீர் விளையாட்டுகள்சாகச விளையாட்டுகள் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ளன”, என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“