Advertisment

லெமன் ஜூஸ், வெல்லம்... மேஜிக் நடக்கணும்னா இப்படி சாப்பிடுங்க!

உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? இந்த அருமையான பானத்தை ட்ரைப் பண்ணி பாருங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
லெமன் ஜூஸ், வெல்லம்... மேஜிக் நடக்கணும்னா இப்படி சாப்பிடுங்க!

Lemon drink helps weight loss recipe in Tamil: நம்மில் பெரும்பாலானோர் அதிகரித்த நமது உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதில் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவையே சரியான வழி என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், பெரும்பாலானோர் இதனை தவிர்த்து குறுக்கு வழியில் உடல் எடையைக் குறைக்க முயன்று வருகின்றனர்.

Advertisment

ஆனால், நிபுணர்கள் கூறுவது போல் ஆரோக்கியமான உணவு பழக்கம் மூலமே உடல் எடையைக் குறைக்கலாம். அதிலும், இயற்கையாக கிடைக்கும் ஒரு சில உணவுகள் இதற்கு துணைபுரிகின்றன. மேலும் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் சில உணவுப் பொருட்களை சேர்ப்பதன் மூலம், உடல் எடையை நிச்சயமாக குறைக்கலாம்.

இவற்றில் நாம் அன்றாடம் பருகும் பானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் ஒரு சில பானங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை வேகமாக எரிக்க உதவி புரிந்து, விரைவில் உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க உதவுகின்றன.

அவற்றில் நம் முன்னோர்கள் கடைபிடித்து ஒன்று சிறந்த பலனை தருகிறது. நம் முன்னோர்கள் தொப்பையின்றி நீண்ட நாட்கள் ஃபிட்டாக இருக்க ஒரு சூப்பரான பானம் ஒன்றை தயாரித்து அன்றாடம் குடித்து வந்துள்ளனர். அந்த பானம் என்ன? அதை எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

வெல்லம் - 1 டீஸ்பூன்

நீர் - 1 டம்ளர்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, நன்றாக கொதிக்க வைத்து இறக்கி கொள்ள வேண்டும். பின்னர், அதில் வெல்லம் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

அதனுடன், எலுமிச்சை சாற்றினை சேர்த்து மீண்டும் கலக்கவும். அவ்வளவு தான் அருமையான பானம் தயார்.

இதையும் படியுங்கள்: பெண்கள் இதை அதிகம் குடித்தால் ஆபத்து; ஏன் தெரியுமா?

இந்த பானத்தை ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடையும், தொப்பையும் வேகமாக குறைவதைக் காணலாம்.

lemon tea 6 - unsplash (1)

நன்மைகள்

எலுமிச்சை உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. இதனால் உடல் எடையைக் குறைத்து பராமரிக்க உதவுகிறது.

எலுமிச்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுப்பதுடன், கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்கிறது.

வெல்லம் உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டபாலிசம்) மேம்படுத்த உதவுகிறது. இதனால், உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Health Tips Benefits Of Lemon Water
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment