எலுமிச்சை சாறு மற்றும் வெந்தயத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி தெரிந்தால் நாம் தினமும் அவற்றை எடுத்துக் கொள்வோம். இதனை அப்படியே சாப்பிடாமல் ஒரு பானமாக மாற்றி குடிப்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். பிரபல சமையல்கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் இந்த ஆரோக்கியமான பானத்தை தயாரிப்பதற்கான வழிமுறைகளை நம்மிடையே பகிர்ந்துக் கொண்டுள்ளார். மேலும் உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் தினமும் காலையில் அதை பருக வேண்டும என வலியுறுத்துகிறார்.
ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு டீஸ்பூன் ஊறவைத்த வெந்தய விதைகளுடன் ஒரு கிளாஸ் சூடான எலுமிச்சை நீரை பருக வேண்டும். என்று கபூர் அறிவுறுத்துகிறார். இது செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. மேலும் இது உடலுக்கு ஒரு சிறந்த நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது என்று கூறினார்.
இப்போது எலுமிச்சை மற்றும் வெந்தயத்தில் உள்ள நன்மைகளைப் பார்ப்போம்.
எலுமிச்சை சாறின் நன்மைகள்
எலுமிச்சை சாறில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது உடலில் நீர்சத்தைத் தக்க வைக்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்றியாக உள்ளதால் வறண்ட சருமம் மற்றும் தோல் பாதிப்புக்கு உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
தவிர காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகும்போது அது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலுக்கு உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலத்தின் மூலக்கூறான சிட்ரேட் சிறுநீரை குறைந்த அமிலம் உள்ளதாக்குகிறது மற்றும் சிறிய சிறுநீரக கற்களை உடைக்கிறது. இதனால் சிறுநீரக கற்கள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கின்றன.
வெந்தயத்தின் நன்மைகள்
வெந்தயத்தில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற ஆண்டிகார்சினோஜெனிக் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளை கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது மலச்சிக்கலை நீக்குகிறது. உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. இதய நோய்களின் ஆபத்தை குறைக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil