காலை உணவை தாமதப்படுத்துவது நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியமா, அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மருத்துவர்கள் விளக்குவது பற்றி இங்கு பார்க்கலாம்.
காலை உணவை தாமதமாக சாப்பிடுவது நல்லது என்றாலும் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது.
காலை உணவு என்பது அன்றைய மிக முக்கியம். சத்தான காலை உணவு, நாள் முழுவதும் ஆற்றலுக்கு இன்றியமையாதது, அதுமட்டுமின்றி உடல் செயல்பாடுகளை சீராக்கவும் உதவுகிறது.
உங்கள் கடைசி உணவுக்கும் அடுத்த நாள் முதல் உணவுக்கும் இடையில் எவ்வளவு நேரம் உள்ளதோ அவ்வளவு அதிகமாக உங்கள் வளர்சிதை மாற்ற நெகிழ்வுத்தன்மை, மைட்டோகாண்ட்ரியல் செயல்பாடு மற்றும் உங்கள் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காலை உணவை தாமதப்படுத்துவது குறிப்பிட்ட ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்தும் என்றும் காலை 10 - 11 மணிக்கு சாப்பிடுவது உடலில் கொழுப்பு எரிவதை ஊக்குவிக்கும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இந்த நேர-கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறை தன்னியக்கத்தை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் கொழுப்பை எரிப்பதை மேம்படுத்தவும் உதவும். தாமதமாக சாப்பிடுவது ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைத்து மனத் தெளிவை மேம்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறினர் .
வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன்களை இந்த உணவு முறை பாதிக்கலாம் அதனால் சமச்சீர் காலை உணவை எடுத்துக் கொள்ளலாம் என கூறினார்.
இருப்பினும் தனிநபரின் அட்டவணைகள், வாழ்க்கை முறை மற்றும் வளர்சிதை மாற்றத்தின் படி சிறந்த காலை உணவு நேரம் மாறுபடும் என்பதால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.