வெற்றிலையின் குணப்படுத்தும் நன்மைகள் குறித்த எனது ஆர்வம் கிட்டத்தட்ட ஒரே இரவில் ஆழ்ந்த வலியுடைய காயத்தை அற்புதமாகக் குறைத்தபோது எழுந்தது. வீக்கத்தைக் குறைக்கும் விரைவான தன்மை, இந்த பச்சை நிறமுடைய, இதய வடிவிலான வெற்றிலையின் உடல்நல நன்மைகள் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்ய என்னை கட்டாயப்படுத்தியது என ஊட்டசத்து நிபுணர் இஷி கோஷலா கூறுகிறார்.
நமது முன்னோர்கள் அதன் பரந்த சுகாதார நலன்களைப் பற்றி நன்கு அறிந்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நவீன நகர்ப்புற மக்கள் அதன் பயன்பாடுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், வாய் புற்றுநோயின் அபாயத்தைக் காரணம் காட்டி வெற்றிலை சாப்பிடுவதை ஊக்கப்படுத்தவில்லை.
இந்தியாவில், புகையிலையுடன் சேர்த்து அல்லது சேர்க்காமலும், ஊறவைத்த சுண்ணாம்பு மற்றும் பாக்கு உடன் வெற்றிலை சாப்பிடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. மதச் சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளிலும் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.
எங்கள் வெற்றிலை உண்மையில் பல நோய் தீர்க்கும் மற்றும் குணப்படுத்தும் நன்மைகளைக் கொண்டுள்ளது என்று தெரிகிறது. வெற்றிலைகளில் வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரைபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். ஒருவர் உண்மையில் உட்கொள்ளும் வெற்றிலை அளவு மிகக் குறைவு இருந்தாலும், இந்த ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இது பங்களிக்கிறது.
இருப்பினும், உண்மையான மருத்துவ நன்மைகள் ஊட்டச்சத்து அல்லாத பிற கூறுகளிலிருந்து கிடைக்கின்றன. பினோலிக் கலவைகள், ஃபிளாவனாய்டுகள், டானின்கள், ஆல்கலாய்டுகள், ஸ்டீராய்டுகள் மற்றும் குயினோன்கள் உள்ளிட்ட பைட்டோ கெமிக்கல்ஸ் போன்ற அதன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் ஆகியவை இதில் அடங்கும். இவற்றின் காரணமாக, வெற்றிலை நுண்ணுயிர் எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதய-வாஸ்குலர் நோய், உயர் கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தடுப்பதில் அதன் பங்கு ஆயுர்வேத நூல்களிலும் ஒரு சில அறிவியல் ஆய்வுகளிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. காயங்கள், வீக்கம் மற்றும் ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிப்பதில் அதன் நன்மைகள் பாரம்பரிய மருத்துவத்திலும் பதிவாகியுள்ளன. பாரம்பரிய மருத்துவத்தில் அறியப்பட்ட பிற நன்மைகளாக வாய்க் குழி கோளாறுகள், செரிமான தொந்தரவுகள் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றிற்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுகிறது.
இருப்பினும், வெற்றிலை தயாரிப்புகளை சாப்பிடுவதால் ஏற்படும் வாய்ப் புற்றுநோய் தொடர்பான கவலைகள் உண்மையானவை. பல ஆய்வுகள் வெற்றிலை தயாரிப்புகளை பயன்படுத்துவோர்க்கு உதடு, வாய், நாக்கு மற்றும் குரல்வளைக்கு புற்றுநோய் அபாயம் அதிகம் இருப்பதாக கூறுகின்றன. ஆனால், இது புகையிலை மற்றும் பிற பொருட்களின் தாக்கமாகும். இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் விளைவுகளை வெற்றிலை மட்டும் ஏற்படுத்துகிறது என்று கூற முடியாது.
குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத நூல்களில் வெற்றிலை உட்கொள்வதற்கு வெவ்வேறு பரிந்துரைகள் உள்ளன.
மேலும் விஞ்ஞான ஆய்வுகள் நடத்தப்படும் வரை, உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக, மற்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லாமல், இந்த மகத்தான நன்மை பயக்கும் இலையை எடுத்துக்கொள்வது நிச்சயமாக நல்லது. அதன் இதய வடிவம் ஒரு தற்செயல் நிகழ்வாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதய ஆரோக்கியம், நீரிழிவு மற்றும் அழற்சியில் அதன் சிறப்புப் பங்கைக் குறிக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil