தினமும் 7 முதல் 10 கறிவேப்பிலை... உங்க 'தலை'யாய பிரச்னைக்கு இதுதான் தீர்வு!
lifestyle news in tamil, curry leaves help hair problems: தமிழ்நாட்டில் பெரும்பாலும் அனைத்து உணவுகளிலுமே கறிவேப்பிலை இடம் பெறும். கிட்டத்தட்ட தாளிப்புகள் அனைத்திலும் கறிவேப்பிலை கட்டாயம் உண்டு. ஆனால் நாம் கறிவேப்பிலையை உண்ணாமல் ஒதுக்கி வைத்தே வருகிறோம். ஆனால் கறிவேப்பிலையில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்தால், நாம் இனி அதை விடவே மாட்டோம். இப்பொழுது கறிவேப்பிலையின் பயன்களைப் பற்றி பார்ப்போம்
தமிழ்நாட்டில் பெரும்பாலும் அனைத்து உணவுகளிலுமே கறிவேப்பிலை இடம் பெறும். கிட்டத்தட்ட தாளிப்புகள் அனைத்திலும் கறிவேப்பிலை கட்டாயம் உண்டு. ஆனால் நாம் கறிவேப்பிலையை உண்ணாமல் ஒதுக்கி வைத்தே வருகிறோம். ஆனால் கறிவேப்பிலையில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்தால், நாம் இனி அதை விடவே மாட்டோம். இப்பொழுது கறிவேப்பிலையின் பயன்களைப் பற்றி பார்ப்போம்.
Advertisment
கறிவேப்பிலை உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக மாற்றுவது எப்படி என்பது பற்றி ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பாவ்சர் பகிர்ந்துக் கொள்கிறார்.
காலையில் தினமும் நோயெதிர்ப்பு தேநீருடன் 7 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொள்ளத் தொடங்கினேன். கறிவேப்பிலை முடி உதிர்தலைக் குறைக்கவும், நரை முடியைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. நீங்கள் அவற்றை மென்று சாப்பிடலாம், பின்னர் சிறிது தண்ணீர் குடிக்கலாம் அல்லது இலைகளை ஒரு கப் தண்ணீரில் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வேகவைத்து கசக்கி, இளஞ்சூடாக இருக்கும்போது குடிக்கலாம். முடி ஆரோக்கியத்தைத் தவிர இது பல குறைபாடுகளுக்கும் உதவுகிறது. மேலும் கீழ்காணும் பிரச்சனைகளுக்கும் கறிவேப்பிலை தீர்வாகிறது.
குமட்டல்
ஆறு புதிய கறிவேப்பிலைகளை கழுவி உலர்த்தி பின்னர் அரை டீஸ்பூன் நெய்யுடன் வறுத்தெடுக்கவும், ஆறிய பின் அவற்றை மென்று சாப்பிட குமட்டல் நிற்கும்.
வாய் துர்நாற்றம்
ஐந்து கறிவேப்பிலைகளை ஐந்து நிமிடங்கள் மென்று பின்னர் தண்ணீர் கொண்டு வாயை கழுவ வாய் துர்நாற்றம் நீங்கும்.
வயிற்றுப்போக்கு
30 இலைகளை அரைத்து, மோருடன் கலந்து சாப்பிட வயிற்றுபோக்கு சரியாகும்.
நீரிழிவு நோய்
துவையலாக அரைத்து சப்பாத்தி மற்றும் சோறு போன்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம்.
வாய்ப்புண்கள்
கறிவேப்பிலையை தூள் செய்து அதனுடன் தேன் கலந்து வாய் புண் மீது தடவ வாய்ப்புண் சரியாகும். கறிவேப்பிலையானது 2-3 நாட்களில் ஸ்டோமாடிடிஸை நீக்குகிறது.
இவ்வாறு கறிவேப்பிலையின் நன்மைகள் பற்றி டாக்டர் டிக்ஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil