கோடை காலத்தில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் பட்டியல் இதோ!

ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.

Limited Budget Summer Trip Plans 2019 : கோடை வந்தாலே, கொண்டாட்டம்தான். அன்றாடப் பிரச்னைகளைத் தற்காலிகமாக மறந்து, மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் நல்ல மருந்து – சுற்றுலா!  தமிழகத்தில் சுற்றுலா என்றால் ஊட்டி, கொடைக்கானல் நினைவுக்கு வரும். இந்த இடங்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் திணறிக் கொண்டிருக்கின்றன. எனவே, அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களை பார்ப்போம்.

கோவா

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் .மக்கள் தொகை பட்டியலில் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலம் ஆகும்.  இந்தியாவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது. இது வடக்கு திசையில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் மற்றும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

பனாஜி இம்மாநிலத் தலைநகரம் ஆகும். இது 1961 இல் இந்தியாவோடு இணைக்கப்படும் வரை போர்ச்சுகீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக 450 ஆண்டுகளாக இருந்தது.
இங்குள்ள புகழ்வாய்ந்த கடற்கரைகள், இறைவழிபாட்டுத் தலங்கள் மற்றும் உலகப் புகழ் வாய்ந்த கட்டடக்கலைகள் ஆகியவை சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.

மேலும் இம் மாநிலம் தாவரம் மற்றும் விலங்கு சார்ந்த வனவளங்களைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சார்ந்துள்ளது. இது பல்லுயிரியம் சார்ந்த முக்கியத்தலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு கோவா மாநிலம் செயல்படுகிறது. இங்கு உள்நாட்டு சுற்றுலா செயல்பாடுகள் குறைவு.

கோவா இரண்டு விதமான சுற்றுலா பயணிகளுக்கு உகந்த காலங்களைக் கொண்டுள்ளது. ஒன்று குளிர்காலம் மற்றது கோடைக்காலம். குளிர்காலத்தில் அயல்நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்(குறிப்பாக ஐரோப்பாவினர்) அதன் சிறப்பான தட்பவெப்ப சூழலை அனுபவித்து மகிழ வருகின்றனர். கோடைகாலத்தில் (அச்சமயம் கோவாவின் மழைக்காலம்) இந்தியாவைச் சார்ந்த சுற்றுலாவினர் தங்கள் விடுமுறையை கழிக்க வருகின்றனர்.

கொடைக்கானல்

தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி கொடைக்கானல் ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.

இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்று பெயர். கடந்த 2006-ஆம் ஆண்டு இந்த குறிஞ்சி மலர் பூத்திருந்தது. ஹனி் மூன் கொண்டாடுபவர்களும் கொடைக்கானலை நாடுவதுண்டு.

ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இங்கு சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களாக….,

பிரையண்ட் பார்க்
தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
தூண் பாறைகள்
கொடைக்கானல் ஏரி
பேரிஜம் ஏரி
கவர்னர் தூண்
கோக்கர்ஸ் வாக்
அப்பர் லெக்
குணா குகைகள்
தொப்பித் தூக்கிப் பாறைகள்
மதி கெட்டான் சோலை
செண்பகனூர் அருங்காட்சியம்
500 வருட மரம்
டால்பின் னொஸ் பாறை
பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
பியர் சோலா நீர்வீழ்ச்சி
அமைதி பள்ளத்தாக்கு
குறிஞ்சி ஆண்டவர் கோயில்
செட்டியார் பூங்கா
படகுத் துறை
வெள்ளி நீர்வீழ்ச்சி
கால்ஃப் மைதானம் உள்ளது.

கொடைக்கானலில் தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினருகே சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு. கொடைக்கானலில் கிராமங்கள் அதிகமாக இருக்கின்றன.

3) ஊட்டி

ஊட்டி என்பது, உதகை என்றும் அழைக்கப்படும். இது தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.

இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக இருக்கும். ஊட்டி கண்களுக்கு அழகான செயல்பாடுகளாலும், பயணிகளின் மகிழ்ச்சியையும் நிறைவு செய்கிற இடமாக விளங்குகிறது.

ஊட்டியில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்

1.ரயில் பொம்மை – மலை ரயில்
2.ஊட்டி ஏரி – படகு இல்லம்
3.ஊட்டியிலுள்ள தாவரவியல் பூங்கா
4.ஊட்டி ரோஜாத்தோட்டம்
5.நூல் தோட்டம் – த்ரெட் கார்டென்
6.தொட்டபெட்டா சிகரம்
7.டால்ஃபின் நோஸ்
8.நீர்வீழ்ச்சி – கல்லட்டி
9.எமரால்ட் ஏரி – எமரால்டு
10.புலிமலை – டைகர் ஹில்
11.காமராஜ் சாகர் ஏரி
12.கோத்தகிரி
13.அண்ணாமலை கோவில்
14.துரூக் கோட்டை (ட்ரூக் ஃபோர்ட்)
15.லெம்ப் பாறை
16.கேத்ரின் நீர்வீழ்ச்சி
17.கேத்தி பள்ளத்தாக்கு
18.ஸ்டீபன் தேவாலயம்

ஜோக் அருவி சிறப்பு

ஜோக் அருவி (Jog Falls) கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் அருவி ஆகும். இது இந்தியாவில் உள்ள உயரமான பத்து அருவிகளில் ஒன்றாகும். மேலும் இது கர்நாடக மாநிலத்தின் முதன்மையான சுற்றுலா மையங்களில் ஒன்றாகும். இந்த அருவியானது கெருசொப்பெ அருவி எனவும் ஜோகதகுன்டி அருவி எனவும் அழைக்கப்படுகிறது.

கம்பீரமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இயற்கையின் பெருமிதப் படைப்பாய் விளங்குகிறது ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.

ஜோக் நீர்வீழ்ச்சி தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருவர்.

தனுஷ்கோடி

தனுஷ்கோடி (Dhanushkodi) தமிழ் நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஓர் ஊர். இது பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ளது.

இதன் சிறப்பு பண்புகளாக….,
உயர் அலைகள் கொண்ட கண்கவர் நீல கடல் காட்சி
கடற்கரையில் பைக் சவாரி
கடல் கரையில் விளையாடி குளிக்கலாம்
கடற்கரையில் அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நடை என்பன உள்ளது.

மேலும் படிக்க : ஊட்டி, கொடைக்கானல்ன்னு அதே இடங்களுக்கு எத்தனை தடவை டூர் போவிங்க? சீக்ரெட் ஹைட்அவுட் ரெடி!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close