ஒரு எழுத்தில் உலகப் புகழை தவறவிட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் !

இருந்தாலும் இந்தியாவில் மிக நீண்ட பெயரை கொண்ட ரயில்வே ஸ்டேசன் இது தான்.

Longest Railway Station Name : உலகிலேயே மிக நீண்ட பெயரை கொண்ட ரயில்வே நிலையம், வேல்ஸ் நாட்டில் உள்ளது. “Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch” இது தான் அந்த பெயரை எப்படி வாசிப்பது என்று சற்று குழப்பத்தில்  தான் இருக்கின்றோம். ஆனாலும் இது தான் உலகின் மிக நீளமான பெயரை கொண்ட ரயில்வே நிலையம். மொத்தம் 58 எழுத்துகள் இதில் உள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், இனி எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கூறியதில் இருந்து மாற்றுக் கருத்து நிலவி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்  “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கிடைத்த புகழ்

ஆங்கிலத்தில் இதை எழுதும் போது, Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station – 57 எழுத்துகள் கொண்ட ரயில் நிலையத்தின் பெயர் கிடைக்கிறது. வேல்ஸ் நாட்டில் உள்ள ரயில் நிலையத்திற்கு போட்டியாக அமைய வேண்டிய பெயர். ஆனாலும் ஒற்றை எழுத்து வித்தியாசத்தில் இந்த பெருமையை இழந்துவிட்டது இந்த ரயில் நிலையம்.

இருந்தாலும் இந்தியாவில் மிக நீண்ட பெயரை கொண்ட ரயில்வே ஸ்டேசன் இது தான். இதற்கடுத்து பெங்களூரு ரயில்வே ஸ்டேசன் க்ரந்திவீரா சங்கோலி ராயன்னா பெங்களூரு சிட்டி – இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

ஆந்திராவில் இருக்கும் வெங்கடநரசிம்மராஜுவரீபேட்டை ரயில் நிலையம் அதற்கடுத்த இடத்திலும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் அதற்கடுத்த இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : 3 ரூபாய் பேப்பர் பைக்காக 9000 ரூபாய் அபராதம் கட்டிய பேட்டா…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close