இன்றைய இளம் தலைமுறையினர் பலர், வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அறவே வெறுக்கின்றனர். குறிப்பாக பெண்கள் மாடல் உடைகளை அணிவதற்கு பெரிய வயிறு ஒரு பெரிய தடையாகவுள்ளது. அதிகம் சாப்பிட்டால் வயிறு தொப்பை போடும் என்று பலரும் கருதுகின்றனர்.
ஆனால் அது உண்மையல்ல. ஜங்க் ஃபூட்ஸை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போகும் சீக்கிரமாக தொப்பை விரட்டி விடலாம். இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று தேடுபவர்களுக்கு இந்த குறிப்புகள் மிகவும் பயன்பெறும்.
1. காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்
2. இஞ்சி சாற்றில் தேன் கலந்து இளம் சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.
3. சிறுதானியங்கள் நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து தொப்பை வளர்வதைத் தடுக்கும்.
4. வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரை, தேன், அதிமதுரச் சாறு மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
5. தினந்தோறும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைப்பில் மாற்றம் தெரியும்.
6. உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.
7. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும்.
8. 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
9. உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது
10. வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.இவற்றை தினமும் உண்பது நல்லது.