விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களான பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் சிறந்த நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா, ஊஊ சொல்றியா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில், இருவரும் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இதுதொடர்பாக அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை பிரியங்கா தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: இந்த இடத்தில் தான் நாங்கள்! ரேஷ்மா, மதன் கியூட் கிளிக்ஸ்
அந்த வீடியோவில், சாப்பாட்டு பிரியையான பிரியங்கா மாலத்தீவில் உள்ள சிறந்த உணவுகளை வெளுத்து கட்டுகிறார். மாகாபா எப்போதும் போல் அவரை கலாய்த்து தள்ளுகிறார். பின்னர் பிரியங்கா மாலத்தீவில் எனக்கு கிடைத்த ப்ரெண்டு என ’மிலா’ என்பவரை அறிமுகப்படுத்துகிறார். அவரை தமிழ் வார்த்தைகள் பேச வைக்கிறார். அப்போது பிரியங்கா தான் ரொம்ப அழகு என்று மிலாவை தமிழில் கூற வைக்கிறார். மேலும் மாகாபாவை விட எனக்கு பிரியங்காவைதான் பிடிக்கும் என்றும் சொல்ல வைக்கிறார்.
பின்னர் மாகாபா வீடியோவில் தனது மனைவியிடம் நீங்க யாரு எனக் கேட்கிறார். அதற்கு பிரியங்கா, புருசனே பொண்டாட்டிய யாரு கேட்குற மொத ஆளு நீதான் என நக்கல் அடிக்கிறார். உடனே மாகாபா நான் இப்ப இண்டர்வீயூ எடுக்குறேன், அதான் அப்படி கேட்டேன். எனக்கு இப்ப மிலா-வை நல்ல தெரியும் என சொல்ல, பிரியங்காவும் மாகாபா மனைவியும் சேர்ந்து, உனக்கு மிலாவை மட்டும் தான் தெரியுது என பொங்கி எழுகிறார்கள். மேலும், என் பேரு வச்சுகிட்டு நல்ல ஜாலி பண்ணு. எப்ப பார்த்தாலும் எல்லார்கிட்டேயும், மிலா, என் வைஃப் பேரு நிலா அப்படினு சொல்லிட்டு இருக்க, நீ யாரா கரெக்ட் பண்ண வந்துருக்கனே தெரியலே என கொதிக்கிறார்.
மேலும், மிலா அவங்க குழந்தையோட வந்துருக்காங்க, உங்களுக்கு 2 குழந்தைங்க வீட்டுல இருக்கு, பொண்டாட்டி நான் இங்க இருக்கேன் என சூசன் சொல்ல, பட்டென சாரி மா என சரண்டர் ஆகிறார் மாகாபா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil