scorecardresearch

ரவை, தயிர் இருக்கா… 5 நிமிடங்கள் போதும்… ஆரோக்கியமான தோசை ரெடி

Tamil Recipe Update : தென்னிந்தியாவில் அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் முக்கிய உணவுளில் ஒன்று தோசை. சுவையாகவும், விரைவில் செய்து சாப்பிடும் அளவுக்கு இருக்கும்

ரவை, தயிர் இருக்கா… 5 நிமிடங்கள் போதும்… ஆரோக்கியமான தோசை ரெடி

Tamil Recipe Update : தென்னிந்தியாவில் அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் முக்கிய உணவுளில் ஒன்று தோசை. சுவையாகவும், விரைவில் செய்து சாப்பிடும் அளவுக்கு எளிமையானவழிமுறைகள் உள்ளது. மேலும் இது ஒரு ஆரோக்கியமான உணவு.

ஆனாலும் தோசை வீட்டிலேயே செய்யம்போது, ​ மாவை ஒரே இரவில் புளிக்கவைக்கும் நீண்ட தயாரிப்பு செயல்முறையை பெரும்பாலும் பலரும் தங்கள் சமையலறைகளில் முயற்சி செய்திரப்பார்கள். ஆனால், ‘நிமிடங்களில்’ தோசை செய்யக்கூடிய செய்முறை இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும்.

மேக்னாவின் ஃபுட் மேஜிக்கின் பேக்கர் மற்றும் உணவுப் பதிவர் மேக்னா கம்தார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோசை எளிமையான முறையில் செய்யும் ஒரு செய்முறையைப் பகிர்ந்துள்ளார்,  தோசைக்கு மாவை அரைத்து 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்.  அதன்பிறகு உங்களது தோசை மாவை எடுத்துகாலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு தயார் செய்யலாம்.

இந்த செய்முறையில் அரிசி மற்றும் பருப்பு மாவுக்குப் பதிலாக சுஜி மற்றும் அட்டாவைப் பயன்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்

ரவை – 1 கப்

கோதுமை மாவு – ¼ கப்

தயிர் – ½ கப்

தண்ணீர் – 1 கப்

உப்பு

பழ உப்பு (Eno) அல்லது சமையல் சோடா – -¼ தேக்கரண்டி

சாம்பார் மசாலா

கொத்துமல்லி தழை

பச்சை வெங்காயம்

செய்முறை

ரவை, கோதுமை மாவு, தயிர், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு மாவில் கலக்கவும். மாவின் தன்மை பொறுத்து தண்ணீரைச் சேர்க்கவும். மாவு ரெடியானதும் அரை மணி நேரம் அப்படியே விடவும்.

2பின்னர், விரைவான நொதித்தலுக்கு, பழ உப்பு (Eno) அல்லது பேக்கிங் சோடா சேர்க்கவும். மாவை 5-6 மணி நேரம் விட்டுவிட்டு இயற்கையான முறையிலும் நொதித்தலுக்கு (புளிக்க) வைக்கலாம்

பிறகு, சூடான, நெய் தடவிய பாத்திரத்தில் மாவை ஊற்றி தோசை செய்யலாம். மேலே சிறிது சாம்பார் மசாலா, கொத்தமல்லி தழை மற்றும் பச்சை வெங்காயம் தூவி, மடித்து, எடுத்தால் சுவையான தோசை ரெடி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Make dosa in minutes with this easy healthy recipe