By Dr Kshitiz Murdia
ஆண் மலட்டுத்தன்மை என்பது இன்றைய நிலையில் தம்பதிகளுக்குள் மிகவும் பரவலான பிரச்சனையாக உள்ளது. ஐம்பது சதவிகித வழக்குகளில் தம்பதிகளுக்கு இடையே ஏற்படுகின்ற மலட்டுதன்மை பிரச்சனை என்பது ஆண்களுக்கு ஏற்படுகின்ற விந்தணு குறைபாடு காரணமாகவே அமைகிறது. சமீப காலங்களில் இந்த மலட்டுதன்மை பிரச்சனை வளரச்சியடைய மாறுபட்ட வாழ்க்கை முறையே ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வயது முதிர்ச்சி, உளவியல் ரீதியிலான மன அழுத்தம், ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு, அதிகப்படியான விதை பை சூடு, கைபேசி மற்றும் கணிணி பயன்பாடு ஆகிய துறைகளில் அதிகப்படியான ஆர்வத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளன.
வாழ்க்கைமுறை அழுத்தங்கள் மற்றும் விந்தணுக்களின் தரம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலாக ஆண் மலட்டுத்தன்மை ஏற்பட முக்கிய பங்குவகிப்பது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் உழைப்பு இல்லாமையே ஆகும்.
கொரோனா வைரஸ் - 'வாரத்துல 7 நாளும் கறி தான்'-ங்கற கேஸ்களுக்கு ரொம்பவே ஆபத்து!
ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மன அழுத்தம்
மன அழுத்தம் என்பது நமது சமூகத்தில் ஒரு பகுதி. அதிலும் மலட்டு தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் மன அழுத்தம் ஏற்பட அதுவே அரு காரணியாக அமைந்துவிடுகிறது. சமூக அழுத்தம், பரிசோதனைகள், சிகிச்சைகள், தோல்விகள், நிறைவேறாத ஆசைகள் மற்றும் மருத்துவ செலவுகள் ஆகியவற்றால் அவர்கள் மேலும் மன அழுத்தத்துக்கு ஆட்பட நேர்கிறது.
சுற்றுச்சூழல் காரணங்கள்
அதிகப்படியான நேரம் வெப்பமான, வேதி பொருட்கள் மற்றும் நச்சு பொருட்கள் உள்ள இடங்களில் செலவிடுவதால் விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் செயல்பாடு பாதிப்படைகிறது.
விதை பைகளில் ஏற்படும் அதிகப்படியான சூடு
இருக்கமான ஆடைகள் அணிந்து அதிகமான நேரம் அமர்ந்து கணிணி மற்றும் மடிக்கணிணிகளில் பணிபுரிவதால் விதைபைகள் சூடாகி அதன்காரணமாக விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் அடிக்கடி நீராவி குழியல் செய்வது மற்றும் குளியல் தொட்டியில் சூடான நீரில் அடிக்கடி குளிப்பது ஆகியவற்றால் தற்காலிகமாக விந்தணு குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
போதை மருந்து பயன்பாடு
உடல் வலு மற்றும் வளர்ச்சிக்காக உட்கொள்ளப்படும் ஊக்க மருந்துகளால் விதைபை சுறுங்கி விந்தணு அளவு குறைய வாய்ப்புள்ளது. கோகேன் போன்ற போதை மருந்துகள் உட்கொள்வதாலும் தற்காலிகமாக விந்தணு குறைபாடு மற்றும் விந்தணுக்களின் தரம் குறைய வாய்ப்புள்ளது.
மது
மது அருந்துவதால் விறைப்புத் தன்மையில் பாதிப்பு மற்றும் விந்தணுகுறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படைந்த அதன் காரணமாகவும் மலட்டுதன்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
10% இந்தியர்களுக்கு புற்று நோய் வரும்; 15 பேரில் ஒருவர் இறப்பார் - உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை
புகையிலை புகைத்தல்
தொடர்ந்து புகைபிடிக்கும் ஒருவருடைய விந்து எண்ணிக்கை, புகை பிடிக்காதவர்களை விட குறைவாகவே இருக்கும்.
மேலும் மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான உடல் எடையும் மலட்டுதன்மை ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது.