ராகி பூரியில் அவ்ளோ நன்மை இருக்கு..! இதை யோசிக்கவே இல்லையே!

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு கேழ்வரகு ஒரு அரு மருந்து.

Healthy Ragi Poori, Masala Ragi poori
மசாலா ராகி பூரி

Healthy Ragi Poori :  கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம். உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு கேழ்வரகு ஒரு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும். அதே நேரத்தில் வழக்கமான கூழுக்கு பதிலாக டேஸ்டியான பூரியாகவும் செய்து சாப்பிடலாம். அதை எப்படி செய்வதென இங்கே பார்ப்போம்.

நடிகைகள் டான்ஸ் ஆடலாம்: ஆனா இவங்க இன்னும் ஸ்பெஷல்!

தேவையானப் பொருட்கள்

கேழ்வரகு மாவு – 2 கப்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

ரவை – ஒரு டீஸ்பூன்

ப.மிளகாய் – 3

கொத்தமல்லி தழை – சிறிதளவு

எண்ணெய் உப்பு – தேவையான அளவு.

செய்முறை

கல்யாண வீட்டு கேசரி டேஸ்டுக்கு இதுதான் காரணம்!

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் ரவையை உப்பு சேர்த்து அரைக்கவும்.

அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, சேர்த்துக் கலந்து பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

பிசைந்த மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

அவ்வளவு தான் ஆரோக்கியமான கேழ்வரகு மசலா பூரி ரெடி!

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Masala ragi poori healthy ragi poori recipe

Next Story
கல்யாண வீட்டு கேசரி..அந்த டேஸ்ட் வர மறக்காம இத சேருங்க!rava kesari recipe rava kesari in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com