Advertisment

தலைமுறைகளை கடந்து தொடரும் பாரம்பரியம்.. மாட்டு பொங்கல் சிறப்பு பகிர்வு!

Mattu Pongal 2019, Interesting Facts About Mattu Pongal:மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thai Pongal, Pongal, Jallikattu, பொங்கல் 2019, ஜல்லிக்கட்டு

தைத் திருநாளின் 2ம் நாளான இன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Advertisment

பொங்கலைத் தொடர்ந்து வருவது மாட்டுப் பொங்கல். இந்த நாளில் உழவர் நண்பர்களாக விளங்கும் மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை அணிவித்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து விவசாயிகள் அதனை கடவுளாக வழிபடுவர்.

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம், காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனைக் காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

publive-image

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறுவது வழமை. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல்… மாட்டு பொங்கல் பட்டி பெருக.. பால் பானை பொங்க.. நோவும் பிணியும் தெருவோடு போக..’ என்று கூறி. மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

Mattu Pongal 2019, Second Day of the Pongal Festival:மாட்டுப் பொங்கல் கொண்டாட காரணம்!

பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய மற்றொரு புராணக்கதையும் உள்ளது. அது சிவபெருமான் சம்பந்தப்பட்டது. பொங்கலுக்கு மூன்றாவது நாளான மாட்டுப்பொங்கல் என்பது, சிவபெருமானும் அவருடைய வாகனமான நந்தியும் சம்பந்தப்பட்டதாகும்.

புராண கதையின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறு சிவபெருமான் கேட்டுள்ளார். தவறாக சொல்லிய நந்தி தினமும் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு குளித்து, மாதம் ஒரு முறை மட்டும் உண்ணுமாறு அங்கே இருக்கும் மக்களிடம் தான் கூறச் சொன்னதாக நந்தியை கூற சொன்னார்.

ஆனால் நந்தியோ மாதமுறை எண்ணெய் மசாஜ் செய்து குளித்து, தினமும் உண்ணுமாறு தவறாக கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியை சபித்தார். அது செய்த தவறினால் இனி பூமியில் நெற்பயிர்களுக்கு பஞ்சம் ஏற்படும் என கூறினார்.

இனி அது என்றுமே பூமியில் வாழ்ந்து, மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டும் என அவர் சாபமளித்தார். அதனால் தான் மாட்டுப் பொங்கலுடன் மாடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

மாட்டு பொங்கல்... ஒரு ஸ்பெஷல் பார்வை

உழவுத் தொழிலுக்கு,உறுதுணையாக விளங்கும் மாடுகளுக்கு  நன்றி கூறும் நாளே இந்நாள்!

Pongal Pongal Festival
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment