நெய் ஒன்று தான் ; அதன் மருத்துவ பலன்களோ பல…

Benefits of ghee : சமையலில் நெய்யை பயன்படுத்தினால் உணவுகள் எளிதில் கெட்டுப் போகாது. குளிர்சாதனப்பெட்டியில் கூட உணவை வைக்க வேண்டிய தேவையில்லை

By: Updated: September 12, 2019, 02:43:24 PM

சமையலில் நெய்யை பயன்படுத்தினால் உணவுகள் எளிதில் கெட்டுப் போகாது. குளிர்சாதனப்பெட்டியில் கூட உணவை வைக்க வேண்டிய தேவையில்லை. நெய் பயன்படுத்தினால் சில உணவுப் பொருட்கள் 100 நாட்கள் கூட தரமாக இருக்கும்.

கொழுப்பு நீக்கம் : பாலிலிருந்து வெண்ணை எடுக்கும்போதே அதில் இருக்கும் சர்க்கரை, கெட்ட கொழுப்புகள் நீக்கப்பட்டு விடும். காற்றுபுகாதவாறு அடைத்து வைத்தால் நெய்யை ஒரு வருடம் வரை கூட பயன்படுத்தலாம்.

உடலுக்கு ஆற்றல் : நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலம் கல்லீரலால் எளிதில் உறிஞ்சப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இதனால் உடல் ஆரோக்கியமாக உற்சாகமாக இருக்கும். இதற்காகத்தான் விளையாட்டு வீரர்கள் உணவுடன், நெய்யை சேர்த்துக் கொள்கின்றனர்.

பருமனைக் குறைக்கும் :நெய் சாப்பிட்டால் உடல் எடை குறையும். நெய்யில் கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை கரைத்துக் கட்டுக்கோப்பாக வைக்க நெய் உதவுகிறது.

செரிமானத்திற்கு ஏற்றது : நெய், செரிமானத்தை தூண்டுகிறது. இதனால் செரிமானம் சீராகிறது. செரிமானம் சரியாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கண்களுக்கு நல்லது : நெய்யில் வைட்டமின்கள் A, D,, E, & K உள்ளன.. இவைகள் கண்களுக்குத் தேவையானது என்பதால் கண் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த மருந்து நெய்.

அழகை பராமரிக்க உகந்தது : சிறந்த அழகுப்பராமரிப்புப் பொருளாகவும் நெய் பயன்படுகிறது. அதாவது முகத்தில் ஏற்படும் கருவளையம், உதட்டுக் கருமை, வறண்ட சருமம் மற்றும் தலைமுடிப் பிரச்னை ஆகியவற்றிற்கு நெய் உதவுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி : நெய்யில் பியூட்டிரிக் ஆசிட் இருக்கிறது. இது இரைப்பை அமிலத்துடன் சேர்ந்து உற்பத்தியாகி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.

புற்றுநோயை தடுக்கும் : இது உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புற்றுநோய் பிரச்னை வராமல் தடுக்கிறது.

காயங்களுக்கு மருந்து : தமிழ் மருத்துவத்தில் நோய்களுக்கு மருந்தாக மூலிகைகளை அளிக்கும் போது அதோடு நெய்யும் பயன்படுத்துகிறார்கள். அதற்குக் காரணம் நெய் மூலிகையில் உள்ள மருந்துகளை உள்ளிழுத்து அந்தந்த பாகங்களுக்கு சீராக அனுப்புகிறது.

பாசிட்டிவ் உணவு : இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சுத்தமான உணவு நெய் அதன் நறுமணம் மனதிற்கு நல்ல எண்ணங்களை அளிக்கும்.

அமிலங்களை சமன்படுத்தும் : மன அழுத்தம்இ உடல் சோர்வு, மனச்சோர்வு எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றால் உடலில் அமிலங்கள் சுரக்கின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Medicinal benefits of ghee

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X