New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/Metti-Oli-Kavery.jpg)
Metti Oli Kavery
சமீபத்தில் மெட்டி ஒலி தொடரில் நடித்தவர்களின் சந்திப்பு நடந்துள்ளது. அந்நிகழ்சிக்கு வந்த காவேரியை பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Metti Oli Kavery
90-களில் ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டிருந்தவர் நடிகை காவேரி. நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்த ’வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ’போக்கிரி தம்பி, சேதுபதி ஐ.பி.எஸ், நல்லதே நடக்கும்’ போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், மற்ற நடிகைகளைப் போலவே சின்னத்திரை நோக்கி பயணமானார். சன் டிவியில் ஒளிபரப்பான ’மெட்டி ஒலி’ சீரியலில் காவேரி நடித்த, தனம் கதாபாத்திரம், இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
கொரொனா அச்சம் : பெங்களூருவில் இருந்த அலுவலகத்தை தேனிக்கு மாற்றிய நிறுவனம்!
அதனை தொடர்ந்து காவேரி, மீரா, தங்கம் மற்றும் வம்சம் ஆகிய தொடர்களில் நடித்தார். அதன் பிறகு இவர் 2013 ஆம் ஆண்டு ராகேஷ் என்பவரை திருமணம் ஆம் கொண்டு பெங்களூருக்கு சென்று விட்டார் காவேரி. திருமணத்துக்குப் பிறகு வேறெந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் மெட்டி ஒலி தொடரில் நடித்தவர்களின் சந்திப்பு நடந்துள்ளது. அந்நிகழ்சிக்கு வந்த காவேரியை பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
’அதிர்ச்சி தந்த நயன், வாவ் சொல்ல வைத்த கல்யாணி’ : முழு படத் தொகுப்பு
கொழு கொழுவென்று இருந்த காவேரி, தற்போது உடல் மெலிந்து பார்க்கவே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, காவேரிக்கு உடல்நிலை எதுவும் சரியில்லையா என்ற கேள்வியை உண்டாக்கின. ஆனால், உடல்நிலை குறைந்த பின்பு முன்பை விட இன்னும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறும் காவேரி, மறுபடி சீரியல்களுக்கு எண்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.