டேஸ்டி பால் பாயாசம்: குக்கரில் இப்படிச் செய்தால் நேரம் மிச்சம்!

Pressure Cooker Paal Payasam in tamil: இந்த சுவைமிகுந்த பாயாசத்தில் பல வகைகள் இருந்தாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் விரும்பும் பாயாசமாக ‘பால் பாயசம்’ உள்ளது.

Milk Kheer in tamil: Pal Payasam in Pressure Cooker tamil

Paal Payasam in tamil: நம்முடைய பாரம்பரிய உணவுகளில் பாயசத்திற்கு முக்கிய இடம் உண்டு. இந்த சுவையான இனிப்பு வகை விசேஷ நாட்களில் பரிமாறப்படும் உணவுகளுடன் இடம் பிடிக்கும். இவற்றுடன் அப்பளம் சேர்த்து சுவைக்கும் போது மதிய உணவு திருப்திகாரமாக அமைந்துவிடும்.

இந்த சுவைமிகுந்த பாயாசத்தில் பல வகைகள் இருந்தாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் விரும்பும் பாயாசமாக ‘பால் பாயசம்’ உள்ளது. இவற்றை ரொம்பவே சுலபமாக செய்து விட முடியும். ஆனால் சிலர் ஏனோ கஷ்டப்படுகிறார்கள். இந்த குறையை போக்கும் வகையில் அனைவருக்குமான சிம்பிள் குறிப்பை இங்கு வழங்கியுள்ளோம்.

பால் பாயாசம் செய்யத் தேவையான பொருட்கள்:

பால் – 1 1/2 லிட்டர்
பச்ச அரிசி – 1/4 கப்
சர்க்கரை – 250 கிராம்.
ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
கண்டன்ஸ்ட் மில்க் – 1 டின் (விரும்பினால்)
பாதம், பிஸ்தா பருப்புகள் (அலங்கரிக்க)

குக்கரில் பால் பாயசம் செய்முறை:

முதலில் ஒரு குக்கர் எடுத்து அதில் நெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் பச்ச அரிசியை சேர்த்து 1 நிமிடத்திற்கு வறுத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து அவற்றோடு பால் சேர்த்துகொள்ளவும். பால் நன்கு கொதி வந்ததும் குக்கரை மூடியால் மூடி 20 நிமிடங்களுக்கு விசில் வர விடவும். (மிதமான சூட்டில்)

பிறகு குக்கர் சூடு தணித்ததும் அவற்றை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான சூடு கொடுக்கவும்.

இதன் பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். மீண்டும் குக்கரை மூடியால் மூடி மிதமான சூட்டில் 20 நிமிடங்களுக்கு விசில் வர விடவும்.

குக்கர் சூடு தணித்ததும் அவற்றை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

தொடர்ந்து நீங்கள் விரும்பினால் கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இப்போது பாயசத்தை ஒரு கொதி வர விட்டு கீழே இறக்கவும். அவற்றுடன் பாதம் மற்றும் பிஸ்தா பருப்புகளை அலங்கரித்து சுவைத்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Milk kheer in tamil pal payasam in pressure cooker tamil

Next Story
இட்லி மாவு இல்லையா? கோதுமை மாவில் சாஃப்ட் இட்லி இப்படி ரெடி பண்ணுங்க!wheat idli recipe in tamil: Whole Wheat Soft & Fluffy Wheat Idly in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com