வரகு அரசி சாதம் செய்வது இவ்வளவு ஈஸியா? இத்தனை நாள் தெரியாம போய்ருச்சே!

Varagu Arisi Sadam: வரகு அரிசி, கோதுமையைக் காட்டிலும் நார்ச்சத்து மிகுந்து காணப்படும் உணவு பொருளாக உள்ளது. இதில் மாவுச்சத்து குறைந்து இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. தவிர கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

Varagu Arisi Sadam: வரகு அரிசி, கோதுமையைக் காட்டிலும் நார்ச்சத்து மிகுந்து காணப்படும் உணவு பொருளாக உள்ளது. இதில் மாவுச்சத்து குறைந்து இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. தவிர கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Millet Recipes in Tamil: How to Cook Millet Rice in tamil

Millet Recipes in Tamil: சிறுதானிய வகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்ப‍து வரகு என்றால் மிகையாகாது. இந்த வரகை நம்முடைய முன்னோர்கள் அடிக்கடி சமைத்து சாப்பிட்டதால் தான், நோய்நொடி இன்றி நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தனர். தற்போது மாறி வரும் உணவு கலாச்சாரத்தில் சிக்குண்ட நாம் கலப்ப‍ட மற்றும் செயற்கை நிறப் பொடிகள், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த, கெட்டுப்போன, ஆரோக்கியமற்ற‍ உணவுகளைத் தேர்வு செய்து ருசித்து வருகிறோம். ஆனால் நம் முன்னோர் விரும்பி உண்ட இந்த வரகில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.

Advertisment

வரகு அரிசி, கோதுமையைக் காட்டிலும் நார்ச்சத்து மிகுந்து காணப்படும் உணவு பொருளாக உள்ளது. இதில் மாவுச்சத்து குறைந்து இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. தவிர கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற ஊட்டச் சத்துக்களும், எண்ணற்ற தாதுப்பொருட்களும் நிரம்பி உள்ளன. மேலும், இவை விரைவில் செரிமானம் ஆவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுப்பைவாகவும் உள்ளன. மேலும் ரத்தத்தில் அதிகளவு சேர்ந்துள்ள‍ ச‌ர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்க உதவுகிறது.

இப்படி எண்ணற்ற மருத்துவ பயன்களை உள்ளடக்கியுள்ள வரகு அரசியில் எப்படி சாதம் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

Advertisment
Advertisements

தேவையான பொருட்கள்

வரகு அரிசி – 1 கப்

தண்ணீர் – 3 1/2 கப்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

தயிர் – தேவையான அளவு

கறிவேப்பில்லை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

நீங்கள் செய்ய வேண்டியவை

வரகு அரசியில் சாதம் தயார் முதலில் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

அதன் பின்னர், ஒரு குக்கர் எடுத்து அதில் அரிசி மற்றும் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்தவுடன் இறக்கி நன்றாக குழைத்து ஆறவிடவும்.

அல்லது ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து கீழே இறக்கவும்.

பின்னர், சீரகம், கறிவேப்பில்லை, தயிர், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து குழைத்த சாதத்தில் கொட்டி கிளறவும்.

அதனைத் தொடர்ந்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் பரிமாறி ருசிக்கவும்.

publive-image

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Tamil Recipe Tamil Food Recipe Healthy Food Tips Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tamil News 2 Food Receipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: