உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க அன்டி ஆக்சிடென்ட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் தான் உயிரணுக்களில் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. உடலைத் தூய்மைப் படுத்தி பாதுகாப்பதில் அன்டி ஆக்சிடென்ட்கள் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, அன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த உணவுகளை தினசரி சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
அதன்படி, எந்த உணவு வகைகளில் அன்டி ஆக்சிடென்ட் அளவு எவ்வளவு இருக்கிறது என தற்போது பார்க்கலாம். கிரீன் டீயின் அன்டி ஆக்சிடென்ட் அளவு 1.5 மி.மோல், ஃபில்டர் காபியில் அன்டி ஆக்சிடென்ட் அளவு 3 மி.மோல், பிளாக் காபியில் அன்டி ஆக்சிடென்ட் அளவு 15 மி.மோல், இஞ்யில் அன்டி ஆக்சிடென்ட் அளவு 20 மி.மோல், புதினாவில் அன்டி ஆக்சிடென்ட் அளவு 115 மி.மோல், நெல்லிக்காயின் அன்டி ஆக்சிடென்ட் அளவு 246 மி.மோல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரும் உணவுகளாக புதினா மற்றும் இஞ்சி விளங்குகிறது. கிரீன் டீ மிகவும் சத்து வாய்ந்ததாக நாம் கருதுகிறோம். ஆனால், அதை விட புதினாவில் 100 மடங்கு அன்டி ஆக்சிடென்ட் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சாதாரண புதினா சட்னி கூட நாம் எதிர்பார்ப்பதை விட ஆற்றல் மிகுந்தது. இது போன்ற சத்தான உணவுகளை சாப்பிடுவது நம் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“