நீரிழிவு நோய் உள்ளவர்கள் பலரும் சுகரைக் கட்டுப்படுத்துவது எப்படி? அதற்கு என்ன வழி என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முருங்கை இலையை தண்ணீரில் கொதிக்கை வைத்து… தினமும் ஒரு ஸ்பூன் சுகரைத் தடுக்க சூப்பர் வழி கிடைத்துவிட்டதை உணர்வீர்கள்.
முருங்கை இலை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுமா என்றால், முயற்சி செய்து பாருங்கள், உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் அதன் விளைவை அறிந்து கொள்ளுங்கள்
நீரிழிவு நோய் நாள்பட்ட நிலையில் இருந்தால், நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் போது, இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது அவசியம். இரத்த சர்க்கரை அளவுகளில் முருங்கையின் விளைவை ஒரு நிபுணர் விளக்குகிறார்.
நீரிழிவு நோய்க்கு தினசரி எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுதும். ஒரு நீரிழிவு நோயாளி இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது நாள்பட்ட நிலையில் உள்ள சிக்கல்களைத் தடுக்க உதவும். இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் பல உணவுகள் மற்றும் பானங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய உணவுகள் மற்றும் பானங்களின் ஜிஐ மதிப்பானது குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் உணவுகளில் ஒன்று முருங்கை. குறிப்பாக முருங்கை இலைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. முருங்கை கீரை, முருங்கைக் காய், முருங்கைப் பூர் ஆகியவை பெரும்பாலும் தென்னிந்திய சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை மற்றும் அதன் இலைகளின் நன்மைகளை அறிய, யஷ்வந்த்பூரில் உள்ள கொலம்பியா ஆசியா ரெஃபரல் மருத்துவமனையில் தலைமை உணவு நிபுணராக இருக்கும் பவித்ரா என் ராஜ் ஒரு ஆங்கில ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளார்.
“முருங்கை மரம், அதன் கீரை, காய், பூ, விதை, பட்டை என அதன் மருத்துவ குணங்களுக்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கையில் பூஞ்சை தடுப்பு உள்ளது. அதுமட்டுமல்ல, வைரஸ் தடுப்பு, மன அழுத்த எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.” என்று பவித்ரா என் ராஜ் கூறுகிறார்.
ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முருங்கை இலை
முருங்கை இலையில் குர்செடின் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஆக்ஸிஜனேற்றியான குளோரோஜெனிக் அமிலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிலைநிறுத்துகிறது. முருங்கையில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், உடலில் சர்க்கரையை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது இன்சுலினையும் பாதிக்கிறது.
முருங்கை இலையின் ஆண்டிபயாடிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மலச்சிக்கல், இரைப்பை அழற்சி மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்க உதவும். ஏனெனில், இது பல்வேறு நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர் பவித்ரா கூறுகிறார்.
முருங்கை இலையை எப்படி பயன்படுத்துவது?
முருங்கை இலைகள், முருங்கை விதைகளை மூன்று வெவ்வேறு வழிகளில் உட்கொள்ளலாம் - முருங்கை பச்சை இலைகள், தூள் அல்லது சாறாக பயன்படுத்தலாம். முருங்கை இலைகளை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளுங்கள், கொஞ்சம் சுவையாக இருக்க வேண்டுமானல் ஒரு துளி எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து தேநீராக சாப்பிடலாம். முருங்கை கீரையை சூப்பாகவும், சமைத்தும் சாப்பிடலாம்.
“முருங்கையின் அளவு வழக்கமாக ஒரு டீஸ்பூன் இருக்க வேண்டும், இது 2 கிராமுக்கு சமம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் நிலைக்கு ஏற்ப சரியான அளவைத் தெரிந்துகொள்ள தங்கள் மருத்துவரை அணுகலாம்” என்று ஊட்டச்சத்து மற்று உணவியல் நிபுணர் பவித்ரா தெரிவித்துள்ளார்.
சுகரைக் கட்டுப்படுத்துவதற்கு இணையத்தில் பல உணவு முறைகள், ஆலோசனைகல் கூறப்பட்டாலும் எதையும் தொடங்குவதற்கு முன்னர், உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.