’மெளனராகம்’ மல்லிகா யார் தெரியுமா? புருவத்தை உயர்த்த வைக்கும் சுவாரஸ்யம்

தமிழில் விஜயகாந்த் நடித்த ‘தர்மா’ படத்தில் நடித்தார் சிப்பி.

Mounaragam Mallika : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘மெளனராகம்’. பெங்காலி சீரியலை தழுவி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கிருத்திகா, சபிதா, ராஜீவ், சிப்பி ரஞ்சித் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

’மாஸ்டர்’ மாளவிகா முதல் ’தளபதி 65’ நடிகை வரை – முழு படத் தொகுப்பு

Chippy Renjith, mounaragam serial mallika

கணவர் ரஞ்சித்துடன்

இதில் சக்தியின் அம்மாவாக கற்பகம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சிப்பி ரஞ்சித். கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 1976-ம் ஆண்டு பிறந்த இவர், 1992-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய, ‘தலஸ்ட்னானம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இருப்பினும் 93-ல் வெளியாகிய ‘பதேயம்’ படம் தான் சிப்பிக்கு முதல் படம், ஆனால் தாமதமாக ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டியுடன் நடித்திருப்பார் சிப்பி.

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் ஷில்பி என்ற பெயரில் நடித்து வருகிறார். ரமேஷ் அரவிந்த் – ஷில்பி கன்னடத்தில் பிரபலமான ஜோடி. தமிழில் விஜயகாந்த் நடித்த ‘தர்மா’ படத்தில் நடித்தார் சிப்பி. ஒரு டஜனுக்கும் அதிகமான மலையாள சீரியல்களில் நடித்தவர், மெளனராகம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார். தவிர, சீரியல் தயாரிப்பாளர், ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி, தொகுப்பாளினி, விளம்பரப்பட நடிகை, ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் என பல முகங்கள் உண்டு சிப்பி ரஞ்சித்துக்கு.

Chippy Renjith, mounaragam serial mallika

ஹீரோயினாக இருந்த போது…

கொரோனாவைரஸ் குறித்த உங்களின் சந்தேகங்களுக்கு பதில்கள் இங்கே!

கர்நாடக மாநில விருது, கன்னடப் படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் சிப்பி வென்றிருக்கிறார். மலையாள தயாரிப்பாளர் ரஞ்சித்தை கரம் பிடித்த இவருக்கு, அவந்திகா என்ற மகளும் உள்ளார். இவருக்கு மோகன்லாலும், குஷ்புவும் மிகவும் பிடித்த நடிகர் / நடிகையாம். பிடித்த சினிமா என்றால் அது ரஜினியும், மம்மூட்டியும் நடித்த ‘தளபதி’ தானாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close