Advertisment

'நான் முன்பு இருந்தது போல் ஃபிட்டாக இல்லை': உடல் ஆரோக்கியம் குறித்து மனம் திறந்த தோனி

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனி, தான் முன்பு இருந்தது போன்று இப்போது ஃபிட்டாக இல்லை எனக் கூறியுள்ளார். மேலும், தனது ஆரோக்கிய பராமரிப்பு குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
MSD

எம்.எஸ். தோனி, தற்போது இந்திய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், என்றுமே அவர் விளையாட்டு வீரர் தான். தோனியின் உடற்பயிற்சி குறித்து அண்மையில் கேள்வி எழுப்பப்பட்ட போது, தனது வயதுக்கேற்றார் போல் நிறைய விளையாட்டுகளில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, "நான் முன்பு இருந்தது போல் தற்போது ஃபிட்டாக இல்லை. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். கிரிக்கெட்டை பொறுத்தவரை ஃபிட்டாக இருப்பதற்காக நான் நிறைய விஷயங்களில் மெனக்கெடுகிறேன். நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. அதனால், நிறைய தீவிரத்தன்மை தேவைப்படாது. அதனடிப்படையில், சரியான உணவு, ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது மற்றும் நிறைய விளையாடுவது எனக்கு உதவியாக இருக்கிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘I am not as fit as I used to be,’ admits MS Dhoni; shares what he does to stay healthy and active

 

Advertisment
Advertisement

மேலும், "நீங்கள் நல்ல உடல் நிலையில் இருந்தால், டென்னிஸ், பேட்மிண்டன் அல்லது கால்பந்து போன்ற பலதரப்பட்ட விளையாட்டுகளை ஆடலாம். இவை என்னை ஈடுபாட்டுடன் வைத்திருக்கிறது. இவை ஃபிட்னஸை பராமரிப்பதற்கு சோர்வை ஏற்படுத்தாமல் இருக்கும். போட்டிகளில் வெற்றி பெற நீங்கள் ஃபிட்டாக இருப்பது அவசியம்" என்றும் தோனி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் அறிந்து கொள்வதற்காக ஃபிட்னஸ் கோச்சாக பணியாற்றும் வருண் ரத்தனிடம் கேள்வி எழுப்பினோம். அதன்படி,  "பல்வேறு விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் பலதரப்பட்ட உடல் தசைகள் ஆக்டிவாக இருக்கின்றன. இதனால், அழுத்தங்கள் வேறுபடுவதால் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு" எனக் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வை மேற்கோள் காட்டி, "ஒரு விளையாட்டில் ஆண்டுதோறும் எட்டு மாதங்களுக்கு மேல் ஈடுபடுவது, இடுப்பு அல்லது முழங்காலில் அதிகப்படியான காயங்கள் ஏற்படும் அபாயத்தை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கிறது" என்று கூறினார்.

பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவது உடல் நலனில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை போல், உளவியல் அழுத்தத்தின் அபாயத்தையும் குறைக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Mahendra Singh Dhoni Fitness
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment