முடக்கத்தான் கீரையில் தோசை; 10 நிமிஷத்துல இப்படி செஞ்சு அசத்துங்க!
mudakathan keerai dosai recipe in tamil: முடக்கத்தான் கீரையை நம்முடைய அன்றாட உணவுகளோடு சேர்த்துக் கொண்டால் கை, கால், மூட்டு வலி போன்ற உடல் வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
mudakathan keerai dosai recipe in tamil: முடக்கத்தான் கீரையை நம்முடைய அன்றாட உணவுகளோடு சேர்த்துக் கொண்டால் கை, கால், மூட்டு வலி போன்ற உடல் வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
Mudakathan Keerai recipes in tamil: 'முடக்கு அறுத்தான்’ என்பது காலப்போக்கில் மருவி முடக்கத்தான் என்றானது. இந்த அற்புதமான கீரையை நம்முடைய அன்றாட உணவுகளோடு சேர்த்துக்கொண்டால் கை, கால், மூட்டு வலி போன்ற உடல் வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். மேலும் முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளையும் குணப்படுத்தும்.
Advertisment
இந்த முடக்கத்தான் கீரையை நாம் ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போக வாய்ப்புள்ளது. ஆனால் நாம் அது பற்றி பயப்படத் தேவையில்லை. இவற்றை தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் கிடைக்கும். தவிர முடக்கத்தான் கீரையின் துவையலை நம்முடைய உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.
இப்படி ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ள முடக்கத்தான் கீரையை எப்படி தோசையோடு சேர்த்து ருசிக்கலாம் என்பது குறித்த எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்.
முடக்கத்தான் கீரை தோசை செய்யத் தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
முடக்கத்தான் கீரை - 2 கப் புழுங்கல் அரிசி - 1 கப் உளுந்து - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் துவரம்பருப்பு - 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு
முடக்கத்தான் கீரை தோசை செய்முறை
முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு ஆகிவற்றை ஒன்றாக சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும்.
இவற்றை அரைத்துக் கொண்டிருக்கும்போதே நன்கு சுத்தம் செய்து நறுக்கிய முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.
இதன் பிறகு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7 மணி நேரம் புளிக்க வைத்துக்கொள்ளவும்.
மாவு தோசைக்கு தயாரானதும், தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இந்த அருமையான தோசையோடு பூண்டு மிளகாய்ப் பொடி சேர்த்து சுவைத்து மகிழவும்.