Murungai Keerai Vadai: முருங்கை கீரை கை, கால் உடம்பு வலிக்கு சிறந்த நிவாரணி. முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து. சரி இந்த முருங்கைக் கீரையில் எப்படி வடை செய்வது என இங்கு பார்ப்போம்.
கிராமத்து டிபன் கடை சாம்பார்: சில நிமிடங்களில் ரெடி
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – கால் கப்
உளுந்து – அரை கப்
ஆய்ந்த முருங்கை இலை – 1 கைப்பிடி
எள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
பெரிய வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை
உளுந்து, அரிசியை இரண்டையும் ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான முருங்கைக்கீரை வடை ரெடி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”